பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமில்லை; அவற்றை வெளியிடுவதும் இல்லை. பத்திரிகை களின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத் துடனேயே, அதற்குத் தகுந்த விதங்களிலேயே, அவை பிரசுரம் செய்யப்படுகின்றன. அவ்வளவுதான்.

முதலாளித்துவ சமுதாயத்தில்-மனிதனே மனிதன்தின்று கொழுக்கிற தத்துவத்தில்-எதுவுமே புனிதமானது அல்ல. முதலே முடக்கி வாணிபத்தில் ஈடுபடுகிறவரை மேலும் பணக்காரகை வளர்ப்பதற்காக எதையும் வணிகப் பொருளாக உபயோகிக்கலாம். அப்படி லாபம் பெற்றுத் தரக் கூடியது நம் வீட்டின் அடுப்பங்கரையில் சமையலுக்கு உபயோகப்படுகிற பொருளாயினும் சரி; ஒரு பெண்ணின் உடலாக இருந்தாலும் சரியே, எல்லாம் ஒன்றுதான்.

முடிவாக நன்கு புலளுவதுதான் என்ன? மேற்கத்திய கலாசாரத்தின் செல்வாக்கு-மேலைநாட்டு முதலாளித்துவ தத்துவத்தின் தாக்கம்-நம் சமூகத்தில் ஆழமாக வேர்ோடி விட்டது. நாம் நமது வாழ்க்கை மதிப்புகளே. நன்னெறிகளை, நமது சுய அடையாளத்தைக்கூட இழந்து நிற்பதற்கு இதுதான் காரணம்.