பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்கு வசதியாக ரோமாபுரி மாளிகைகளில் விருந்து மண்டபங்களை ஒட்டி, வாந்தி எடுப்பதற்கென்றே தனித் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. காம உறவுகளில் வக்கிர முறைகளை அனுஷ்டிப்பதில் உற்சாகம் , கொண்டிருந் தார்கள்.

இப்படி எல்லாம் சரித்திரம் விவரிக்கிறது. ஆளுல், கால வேகத்தில் மனித இனம் வெகுவாக முன்னேறியுள்ளது. இந்த விதமான நடவடிக்கைகளை நாம் வெறுக்கிருேம். எனினும், சரித்திரம் திரும்பத் திரும்ப எதிரொலித்து வருவதும் காலத்தின் நியதி ஆகும். o

மேலே நாகரிகம்-முக்கியமாக அமெரிக்கக் கலாசாரம்இந்த வழியிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் போக்குகள் இதையே உணர்த்துகின்றன.

பண ஆதிக்கத்தையும் சுகபோக வசதிகளையும் வளங் களையும் தனி உடைமை ஆக்கிக் கொண்ட வர்க்கத்தினர் தங்களுடைய சுய இன்பத்துக்காகவும், பிசினஸ் ரீதியில் பணம் திரட்டுவதற்காகவும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பட்டுள்ளோரை திசை திருப்பி விடுவதற்காகவும், அவர்களே மயக்க நிலையிலேயே வைத்திருப்பதற்காகவும் நச்சுவேலை களையும் நசிவுக் கலைகளையும் வளர்ப்பதில் கருத்தாக இருக்கிரு.ர்கள்.

நாகரிகப் பெருநகரங்களில் செயல்படுகிற இரவு விடுதி களும், கேளிக்கை கிரகங்களும் பிறவும் இந்த அடிப்படையில் அமைந்து செயல் புரிகிறவைதான். இவற்றில் புதுமை சேர்க்கிற முயற்சிகள் அந்நாகரிகச் சீமான் சீமாட்டிகளது விக்கிர மனநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.

உலகம் பூராவும், நாகரிக ஆண்கள் கண்டு மகிழ் வதற்காகப் பெண்கள் ஆடை அவிழ்த்து அம்மணமாய் ஆடிக் காட்டுகிற கலைநிலையங்கள் ஏராளமாக இருக்கின்றன. பெண்கள் பார்த்து ரசித்து இன்பம் அடைவதற்கென்று ஆண்கள் ஆடை உரித்து ஆடுகிற அரங்கத்தை ஏன் அமைக்கலாகாது என்று எண்ணியது ஒர் அமெரிக்க மூளே.

43