பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். என்ற இந்த நூலை வள்ளலார் நூலகத்தின் வெளியீடாக வருவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றோம்!

கோட்டையிலே ஒரு குறிஞ்சி மலர்க் காலம் கொலு வீற்றிருந்த புரட்சித் தலைவர், தமிழக மக்கள் மனதிலே முதலமைச்சர் என்ற கொடியைப் பறக்க விட்டு பவனி, வந்தவர் என்பதை தமிழ்நாடு அறியும்:

கலையுலக மன்னாதி மன்னனாக விளங்கிய அவர், தான்் நடித்த படங்களை எல்லாம் தமிழக மக்களுக்குரிய மாமல்ல புரத்து அறிவுரை ஒவியங்களாக, நீதி நெறிச் சிற்பங்களாக, வாழ்வியல் தத்துவக் கல்வெட்டுகளாக விட்டு விட்டு மறைந்தார்! அவை படங்களல்ல மக்களுக்கான பாடங்கள்!

அத்தகைய ஒர் அரிய மனிதரைப் பற்றிய நூல் இது. புலவர் என். கலைமணி அவர்கள் எழுதியுள்ள ஒரு புதுமை நோக்கு ஒரு முறை படித்து பாருங்கள்!

அற்புதமான அணிந்துரைகளை அழகுபட எழுதி அளித்துள்ள திரையுலக காவியக் கவிஞர் திரு. வாலி, சைவ சித்தாந்த கவிமணி திரு. மு.பெ. சத்தியவேல் முருகன் பி.இ., மும்மொழிப் புலவரும், தத்துவக் கவிஞருமான திரு. முருகுவண்ணன், கவிதைச் சித்தர் திரு. கவிஞர் மணிமொழி ஆகியோருக்கும் எமது நன்றியை நவில்கின்றோம்.

வா. அறிஞர் அண்ணா