34. எடுத்து இயம்புவது. வீட்டரசி - வாழ்வரசி மனை வாழ்க்கைக்கு ஏற்ற பண்புடையவளாய் இருத்தல் வேண்டும். சிறப்பாகத் தன் கணவன் வருவாய் அறிந்து வாழ்க்கை நடத்த வேண்டும். அதுவே, மணமகள் மனையறம் ஏற்குமுன் கொள்ளவேண்டிய முதல் உறுதிப்பாடு. இத் திருக்குறளுக்குப் பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்களின் தெளிவுரை வருமாறு: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடைய வளாகித் தன் கணவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கை கடத்துகிறவளே வாழ்க்கைத் துணை ஆவாள். ' அடுத்து, மக்கட் பேறு என்ற அதிகாரம். இதில் எட்டாவது குறளாக இலங்கும் பெருமை படைத்த திருக்குறள், தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (68) என்பது. பெருமை சான்ற இத் திருக்குறள் குடும்ப வாழ்க்கையின் குறிக்கோளை எடுத்துரைக்கிறது. ஆம். வீடு காட்டிற்காக - காடு வீட்டிற்காக என்பது திருவள்ளுவரின் தெளிந்த கோட்பாடு. மனமாட்சி மங்கலம் நிறைந்தது அதற்கு அணி கலனுய் விளங்குவது கன்மக்கட்பேறு. வெறும் மக்களைப் பெறுவது பேறு ஆகாது. கன்மக்களைப் பெறுவதே பேறு. அப்பேறு பெற்றவர்க்கு மட்டும்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/35
Appearance