உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெண்ணை மணமகனுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் செய்தி முதன்முதலாக இந்நூலுள் ளேயே நுழைந்துள்ளது எனலாம். இனி, அரச குடியைச் சார்ந்த ஒருவன் புரியும் ஒன்பது திருமணங்களுள் சிலவற்றுள் கலப்புத் திருமணங்களும் உண்டு. அவற்றை ஒன்றன்பின் ஒன்ருக உரைக்கும் சிங்தாமணியால் தெரியவரும் செய்திகளை அந்நூலுள் உள்ள முறைப்படிப் பார்ப் டோம். அவை வருமாறு: 1. மணமகளை நீராட்டுதல், 2. அவள் முன்னர் அணிந்திருந்த பசும்பொன் தோட்டையும் மணிகள் பதித்த குழையையும் நீக்கிவிட்டு அவளுக்குமங் கலக்கடிப்பு (கடிப்பு - காதணி) அணிவித்தல், (இப்போது புத்தணிகள் அணிவித்தல் மட்டும் உண்டு.) 3. மலர்மாலை அணிவித்தல், 4. இவ் வாறு மணமகளுக்குக் கோலம்செய்த பின்னர் அவள் தங்தை தாரைவார்த்தல்-மணமகன் ஏற்றல்," 6. மணமகன் மணமகளின் முன்கையைப்பற்றித் தி வலம் வரல், 7. திருமணத்திற்கு நல்ல நாள் பார்த்தல். 8. திருமணகாளில் முரசு, முழவு, சங்கம் முழங்க மணமகன் மணமகளை மணத்தல், 9. மன மகள் முன்கையில் காப்புக் கட்டுதல். 10. மன மக்களுக்குக் கோலம் செய்வித்தல் 11 வதுவை கன்னுளை அனைவர்க்கும் கூறல். 12. மணமகன் மணமகள் இடக்கையைப்பற்றித் தீ வலம் வரல். 13. அருந்ததி காட்டல் ( இவ்வழக்கங்கள் இப்போதும் உண்டு.)