உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. இனி, தமிழ்நாட்டு வரலாற்றைத் தனிச்சிறப் புடன் கூறும் கி. பி. 12-ஆம் நூற்ருண்டைச் சார்ந்த பெரிய புராணத்தில் சுந்தரர் திருமணம் இரண்டும் சம்பந்தர் திருமணம் ஒன்றும் ஒதப்பட் டுள்ளது. இவற்றுள் சுந்தரர் திருமணம் காதல் - கலப்புத் திருமணங்கள். ஸ்மார்த்த பிராமணராகிய சம்பந்தர் திருமணம் வைதிக முறையில் அமைந் தது. இதில், 1. மணமகள் தந்தையார் சம்பந்தரின் பாதங்களை விளக்குதல்." 2. தாரைவார்த்துத் தரு தல், 3. மறை ஒலி பொங்குதல். 4. மங்கல வாழ்த்து நடைபெறல், 5. பொரி கட்டுதல், 6. சம்பந்தர் மனமகளைக் கைப்பிடித்துத் தீ வலம் வருதல்- ஆகிய குறிக்கப்பட்டுள்ளன. (”இவ்வழக்குகள் இப்போதும் உண்டு.) இனி, குங்குலியக்கலய நாயனர் புராணத்தில் பொருளின்மையால் அவர் மனைவியார் தமது மங்கல நூலில் கோர்க்கப்பட்டிருந்த தாலியைக் கழற்றிக் கணவரிடம் கொடுத்து கெல் வாங்கிவரச் சொன் னர் என்று சேக்கிழார் கூறியுள்ளார். 'கோதில் மங்கல நூல்தாலி கொடுத்து நெற் கொள்ளும்' என்ருர். இப்பொருண்மை வாய்ந்த வரியால் எட்டாம் நூற்றண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றண்டிற். கும் இடையில் நூலிலிருந்த தாலி பெற்ற வளர்ச்சி விளங்கும்.