உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 1. இன்றும் மலையாள மக்களிடையே தாலி கட்டும் மரபு உண்மைத் திருமணத்தில் இல்லை; புத்தாடை (முண்டு) கொடுத்தல் உண்டு. 2. பழங் குடி மக்களாகிய தொதவர், கோதர், படகர், கோயிகள், கொண்டர், சவரர், முதுவர், ஒட்டர், ஏனுதி, செருமார், முக்குவர், பலியர், வலையர், புலையர், பறையர், நாயாடிகள், பனியர், மலக்கர், கரிம்பனர், மலேயர், மலசர், காடர், வேட்டுவர், மரவிலோர், அருகடர், காப்பிலியர், கொரகர், காடு குறும்பர், மொயர், கார்விகள், பாணர், ஒடாரி முதலியோர் தாலி கட்டல் இல்லை. 3. முக்குலதேவர் மர பி ல் மணமகளின் உடன்பிறந்தவர் மண மகளுக்கு அவள் வீட்டிற்குச் சென்று தாலிகட்டி அழைத்துவரும் வழக்கம் இருக்கிறது. இவர்களுள் சிலர் இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றபின்பு பலரறிய மணம் கொள்ளும் பழக்கமும் இருக்கிறது. 4. கொங் கு வேளாளருள் அவரினத்துப் புரோகிதரான அருமைக்காரரே தாலிகட்டுவார். கோலியர் வகுப்பில் இருவகை மணம் உண்டு. சிறிய திருமணத்தில் நாத்தியும், பெரிய திருமணத் தில் மணமகனும் தாலிகட்டுவர். 5. சில மட்பாண்டத் தொழிலாளருள்ளும் கோட்டை வேளாளருள்ளும் நல்வாழ்வு வாழ்ந்த வருமான ஒருவரும் பெண்ணின் நாத்தியும் சேர்ந்து தாலிகட்டுவர். பள்ளருள் காத் தி கட்டுதலும் உண்டு; கணவர் கட்டுதலும் உண்டு. பட்டினவர் மறுமணத்தில் கணவனே அவனைச் சார்ந்த ஒரு