உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 டல், சங்கம் ஊதல் போன்றவைகள் விளம்பரப் படுத்துகின்றன. பரிசமிடுதல், நிச்சயம் செய்தல், கோத்திரம் கூறல் போன்ற சடங்குகள் மன ஒப்பங். தத்தையும், அதற்கு வேண்டிய சான்றுகளையும் அளிக்கும். தீபம் ஏத்தல், ஆரத்தி, கலங்கு முதலிய சடங்குகள் கண்ணேறுபடாமல் காப்பதற்காகச் செய்யப்படுபவை. விரதம், உபநயனம், காப்புப் போன்ற சடங்குகள் தம்பதிகள் இதுவரையி லிருந்த நிலையிலிருந்து விலகியிருத்தலைக் குறிக் கும். புத்தாடை அணிதல், தாலி மெட்டிப் போன்ற நகைகளை அணிதல், மாலை, மோதிரம் மாற்றல், தம்பதிகள் புதிய நிலைக்கு மாறுதலை அறிவிக்கும். தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருங்ததி காட் டல், குங்குமம் அப்பல், பட்டம் கட்டுதல், மஞ்சன மாடல், தாரை வார்த்துத் தருதல், கைத்தலம் பற்றல் போன்ற சடங்குகள் தம்பதிகளுடைய புதிய கடமைகள், உரிமைகள், நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும். ஆசீர்வாதம், விருந்தளித்தல் போன்ற சடங்குகள் தம்பதிகளுடைய புதிய வாழ்க் கைக்கு வேண்டிய ஆதரவளிப்பனவாகும். (7) இந்த வைதீகத் திருமணச் சடங்குகள் ஒரு நூற்றண்டுக்கு முன்புவரை பார்ப்பனப் புரோகிதர் இன்றி வள்ளுவர் முதலியோரைக் கொண்டு திருமணச் சடங்குகள் செய்த வகுப்பாருள்ளும் ஊடுருவியுள்ளது வியக்கத்தக்கது. சிறப்பாகத் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வந்தபின் அதையும்