55 குப் பிறக்கும் மக்களின் மனத் தெளிவும் உடல் திண்மையும் அமையும். அதனுல் குழந்தைளின் உடல் வளர்ச்சியிலும் மனவளர்ச்சியிலும் ஒழுங்கும் ஒழுக்கமும் கிற்றல் வேண்டும். அந்த ஒழுங்கும் ஒழுக்கமும் கடவுள் கெறியின் அடிப்படையிலேயே கற்பிக்கப்படுதல் இன்றியமையாதது. ஊட்டம் தரும் உணவு குழந்தை பிறக்கு முன்பே தன் உடலில் சிறி தளவு இரும்புச் சத்தைப் பெற்றிருக்கிறது. பிறந்த பின்னர் அச்சத்துச் செலவழிந்து விடுவதால் ஆறு மாதக் குழங்தைக்கு இரும்புச் சத்து மிகத் தேவை யாயுள்ளது. ஒன்பது மாதங்கள் வரை குழந்தை யின் சிறந்த உணவு பசுப்பால். இதில் எல்லாச் சத்துக்களும் அமைந்திருப்பினும் குழந்தைக்கு அந்தப் பருவத்தில் தேவையான இரும்புச் சத்துக் குறைவு. அதேபோல் கால்சியமும் பாஸ்வரமும் பாலிலுள்ள சர்க்கரைப் பொருளால் பாதிக்கப்படுவ தால் அவை இரண்டும் குறைபடுகிறது. இரும்புச் சத்து இல்லையெனில் இரத்த சோகையும், பாஸ்வர மும் கால்சியமும் குறைபடின் எலும்பு வளர்ச்சிக் குறைபாடும் ஏற்படுகிறது. முட்டையின் வெள் ளேக் கருவில் இரும்புச் சத்து அதிகம். எனவே, முட்டையின் வெள்ளைக் கருவைப் பாலில் கலந்து இரண்டு தேக்கரண்டி கொடுக்கும்படி டாக்டர்கள் கூறுகின்றனர். இதைவிட இரும்புச் சத்துள்ள 2J28ー5
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/66
Appearance