உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 குழந்தைகளுடன் கூடி விளையாடுவதால் தன்ன டக்கம், பொறுமை, கோபத்தை அடக்கல், விட்டுக் கொடுத்தல், முயற்சி, சகிப்புத் தன்மை, பிறருக்குக் கீழ்ப்படிதல், மற்றவரிடம் அன்பாகப் பழகுதல் முதலிய பண்புகள் உருவாகின்றன. பெற்ளுேர்-மற்ருேர்-கடமை இவ்வாறு பண்பாட்டின் வழிப் பழக்கமடை கின்ற குழந்தைகளின் வாழ்க்கை உரிமையோடு வளர ஆரம்பிக்கிறது. அவற்றின் வேலைகள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்க ஆரம்பிக்கின்றன. பாரதியார் கூறுவது போன்று, கால எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப்படுத்திக் கொள்ளு - பாப்பா! என்ற ஒழுங்கு ஏற்படுகிறது. இங்கிலையில் குழங்தையின் வாழ்க்கை செப்பமடையச் செய்ய வேண்டும் பொறுப்பு வீட்டில் பெற்ருேருடையதாக வும், வெளியில் பொது மக்களுடையதாகவும் பள்ளியில் ஆசிரியருடையதாகவும் இருக்கிறது. அறிவு வளர வளர, வளர்ச்சிக்கேற்ப பொருள் களின் அறிவையும் புகட்டல் வேண்டும். கல்லது -தீயது, நியாயம்-அங்யாயம், சரி-தவறு இவ் வாறு பகுத்து அறியச் செய்தல் வேண்டும். ஆர் வத்திலும ஆராய்ச்சியிலும் அலைபாயும் குழந்தை உள்ளத்தைச் சோம்பித் திரிய விடலாகாது.