85 வரையறுக்கப்படக்கூடிய கலையும் அல்ல. காலக் தோறும் காலங்தோறும் தோன்றும் மக்களின் உணர்வுக்கேற்ப, அவர் வாழ்க்கை இயலும், பண் பாடும் சிறப்புற்று வருவது இயல்பாகிறது. அப் படிப்பட்ட ஒரு கலையை வாழ்க்கைக் கலையை - ஆரவாரமின்றி - அருக்களையிலேயே - அன்பு மனை யிலேயே - ஆழ்ந்த உணர்வோடு பயிற்றுவிப்பவள் தாய, பானையை உருவாக்குபவன் கையிலகப்படுவது வெறும் ஈரமண், உடுவமற்றது; உறுதியற்றது. எனினும் கண்டவர் களிப்புற, விலை கொடுத்து வாங்கியவர் பயன்பெற, அந்த மண்ணையும் தகுதி யுடையதாக்குகின்ற திறன் தொழிலாளியினுடை யது. அவன் எண்ணப்படி சுழல்வது அவன் பானை வனையும் சக்கரம். அச்சக்கரச் சுழற்சியின் உயர்வுக் கேற்ப உறுதிக்கேற்ப - அவன் உண்டாக்கும் பாத்திரங்கள் உயர்வடைகின்றன. குழந்தைகளும் பச்சைமண்ணை ஒத்தவர். பயிற்சிச் சக்கரத்தில் பக்குவமாய்ச் சுழலவிட்டால் அவர்கள் பயிற்சிக் காரனின் எண்ணங்களுக்கேற்ப உருவாகின்றவர். தாயைப்போல பிள் அள, நூலைப்போல சேலை. அல்லவா? குடும்பத்தில் தாய்மட்டுமல்ல; தந்தை, உடன் பிறந்தார், சுற்றத்தார், நண்பர், விருந்தினர் அனை வரும் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித் தனி பண்புகள், விருப்பு வெறுப்பு, பெ ரு மை சிறுமை, வலிமை எளிமை,இன்பம் துன்பம் எல்லாம்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/86
Appearance