பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன் மீண்டும் உதிக்கிறது

திரைப் படங்களுக்கு, இன்று யார் வேண்டுமானலும் உரையாடல் எழுதிவிடலாம். அவ்வாறே படங்களுக்குப் பாடல்களும் எழுதிவிடலாம். ஆளுன், 1950-க்கு முன் இப் படிப்பட்ட சூழ்நிலை இல்லை. ஒரே ஒரு இளங்கோவன் தான் வசனம் எழுத முடியும். ஒரே ஒரு உடுமலை நாராயணகவி தான் பாடல்கள் எழுத முடியும். -

அப்படிப்பட்ட கால கட்டத்தில், சிறுவனகிய நான் 1944-ஆம் ஆண்டு, பி. யு. சின்னப்பா, பி. கண்ணும்பா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் முதலியோர் நடித்த மங்கையர்க்கரசி என்னும் படத்திற்கு வசனம் எழுதும் அரிய வாய்ப்பினேப் பெற்றேன்.

'இந்தச் சிறு வளு இப்படத்திற்கு வசனம் எழுத முடியும்? என்று அப்போது பலர் பேசிக் கொண்டனர். ஆனல் நடிகர் சின்னப்பவோ, என் எழுத்தாற்றலைப் பாராட்டிய தோடு படாதிபதிகள் பலருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய ஆதரவு மட்டும் எனக்கு இல்லா திருக்குமாயின், நான் ஒரு வசனகர்த்தாவாகியிருக்க முடியாது.

முதன் முதலில் நான் வசனம் எழுதிய இப்படம் 3-9-1949-ல் வெளிவந்தது. அது முதல், இளங்கோவனைப் போல் நானும் ஒர் சிறந்த வசனகர்த்தா என்று பலராலும் பாராட்டப் பெற்றேன்.

இப்படத்தில் வரும் உரையாடல் மிகச் சிறந்த உரை யாடல் என்று பலரும் கருதிய காரணத்தால், இதனை ஒழுங் காகத் தொகுத்துக் காலத்தை வென்ற கவிஞர்கள் இரு வரின் அணிந்துரைகளோடு 1950-ல் முதல் பதிப்பாக வெளி யிட்டேன். 28.ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல், இரண்டாம் பதிப்பாக இப்போது வெளிவருகிறது. *

இதையடுத்துப் புரட்சி நடிகர் எம். ஜி. ஆரும், பி. எஸ். சரோஜாவும் நடித்து 1953-ல் வெளிவந்த ஜெனேவா என்னும் படத்திற்கு நான் எழுதிய உரையாடல் வெளிவரும்.

8–2–1978 சுரதா