பக்கம்:மச்சுவீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார் பாட்டு

7

தாக வைத்து இடம்பட வீடிடேல்' என்று ஔவையார் பாடியிருக்கிறார். அடுத்தபடி ணகரத்தையும் 'இணக்க மறிந்து இணங்கு' என்று வைத்துப் பாடியுள்ளார்.

பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் விநாயகரைத் துதிப்பதற்காக அமைந்த பாடல்களில் இந்த அகராதி வரிசையில் ஒரு பாட்டு உண்டு. நினைப்பவர்களுக்கு அருள் செய்யும் ஆனைக்கன்றாகிய பிள்ளையாருடைய புகழைச் சொல்லும் அந்தப் பாட்டு, மிகவும் எளிய நடையில் அமைந்ததென்று சொல்ல முடியாது. பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால் உபாத்தியாயரைக் கேட்டுக்கொண்டு அறிந்துகொள்ளும்படி இருக்கிறது.

இந்தப் பாட்டை இயற்றினவர் இன்னாரென்று. தெரியாது. 'வேழ முகம்' என்று பழங்கால முதல் வழங்கி வரும் பாடல் தொகுதியிலே உள்ளது இது. பள்ளிக்கூடத்தில் சேரும் பிள்ளைகள் முதலில் படித் துப் பிள்ளையாரை வழிபடுவதற்கு உபயோகமாக இருப்பது.

குழந்தைகளுக்கு விளங்காத விஷயங்களும் அவர்களுக்கு விளங்கக்கூடிய செய்திகளும் இந்தப் பாட்டில் கலந்து வருகின்றன. "அன்புடை அமரரைக் காப்பாய் ஜயஜய என்றால் குழந்தைகளுக்கு எளிதில் விளங்காது. ஆனால், 'ஈசன் தந்தருள் மகனே" என்பது விளங்கும். "பள்ளியில் உறைதரும் பிள்ளாய்" என்று கணபதியைத் தங்கள் உறுதுணையாக எண்ணுகிறார்கள். இறகைப் பதித்து எழுதுவதற்கும், விடியற் காலையில் எழுந்து தொழுவதற்கும் அருள் செய்ய வேண்டுமென்று குழந்தைகள் வேண்டிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/13&oldid=1301807" இலிருந்து மீள்விக்கப்பட்டது