பக்கம்:மச்சுவீடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளையாட்டு

கவிஞர்களுக்கும் பக்தர்களுக்கும் கண்ணன் கற் கண்டுக் கட்டி. அவனுடைய பால லீலைகளிலே கற் பனை ரதத்தைச் சஞ்சாரம் செய்ய விட்டுவிட்டால் அளவு, எல்லை, கட்டுப்பாடு ஒன்றும் இல்லாமல் கவிதை உள்ளம் புதுப் புதுச் சித்திரங்களைப் பொழிந்து கொண்டே இருக்கலாம். கோபியர்களுடன் அவன் கோகுலத்தில் செய்த சல்லாப உல்லாசத் திருவிளை யாடல்களைக் கவி பரம்பரையினர் நினைத்து நினைத்துப் பாடி வருகிருர்கள். இன்னும் அதற்கு முற்றுப்புள்ளி போடவில்லை. பெரியாழ்வாருடன் ஆண்டாளும் கண்ணபிரானக் குழந்தையாகவும் காதலனுகவும் அது பவித்துப் பாடிய சுவைமயமான பாடல்கள் தமிழ் இலக்கிய உலகிலும் பக்தி உலகிலும் சிறப்பைப் பெற் றிருக்கின்றன. பாகவத புராணத்தில் தசமஸ்கந்தம் முழுவதும் கண்ணன் திருவிளையாடல் கமழ்கின்றது. மற்ற மொழிகளிலும் கண்ணனுகிய காதலன் கோபியர் களுடன் ஆடிய விளையாடல்களை வருணிக்கும் பாடல்கள் அளவிட்டு உரைக்கக் கூடியவை அல்ல.

பழங்காலத்தில் சங்கப் புலவர்கள், கண்ணபிரான ஆயர் குலத்தார் வழிபடும் போக்கையும் அவர்கள். குரவையாடிப் பாடும் கோலத்தையும் சொல்லியிருக் கிருர்கள். நம் காலத்தில் வாழ்ந்த பாரதியாரும் கண் ணன் பாட்டில் வேறு எந்தப் புலவரும் தொடாத நிலங்களையெல்லாம் தொட்டுக் கண்ணனைச் சேவக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/32&oldid=610701" இலிருந்து மீள்விக்கப்பட்டது