பக்கம்:மச்சுவீடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் செய்த சோதனை 53

பூரீவாங்க முனிவரின் ஒலத்தைக் காட்டிலுள்ள விலங்குகள் கேட்டன; மரங்கள் கேட்டன; மலைகள் கேட்டன. அவருடைய துயரத்தைக் கண்டால் கல் லும் கரையும்; பேயும் மனமிரங்கும். கண்ணன் இரங்க வில்லை.

சந்நியாச யோகம்

தவறியே போய்விழுந்தால் பின்னே எனக்குப்

பிழைப்புண்டோ மாதவரே! என்னபிழை செய்தாலும்

என்றனே நீர் காத்தருளும் பொன்னே கிருபையுடனே

பூர்ண தயை செய்யுமையா! என்று அவர் கதறும் கதறலைக் கண்ணன் கேளாமலா இருப்பான்? கேட்டும் அவன் இரங்கவில்லை. தன் குழந்தைத் திருவடிவத்தைப் புறங்கையாலே மறித்து ஒதுக்கிப் போக்கின துணிவு அந்தக் கல்நெஞ்சி லிருந்துதானே உண்டாயிற்று? அது நைந்து புலம்பி வெம்பிக் குமைந்து கரைந்து போக வேண்டு மென் பது அவன் திருவுள்ளம் போலும் முனிவர் மெழுகாய் நெகிழ்ந்து நீராயுருகி நெட்டுயிர்த்து நாடி ஓடித் தேடிச் செல்கிருர். -

கண்ணன் திருமேனி அழகை நினைந்து நினைந்து புலம்பிக் கால் போன வழியே சென்றுகொண்டிருந் தார் பூரீவாங்க முனிவர். அவர் காதில் சிலம்பொலி மாத்திரம் ஒலித்துக்கொண்டிருந்தது. "அப்பனே, உலகத்துக்கெல்லாம் தனி உயிராக நிறைந்திலங்கும் உன்னை மறந்தால் உலகமெல்லாம் கலங்காதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/59&oldid=610728" இலிருந்து மீள்விக்கப்பட்டது