பக்கம்:மச்சுவீடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*60 மச்சு வீடு

சுத்தி மணிகுலுக்கித் துபதி பங்காட்டிப் பக்தியுடன் நைவேத்தியம் பாங்குடனே செய்துமவர் கல்பகக் கணி.அரிசி அமுதுசெய்ய வேணுமென்னப் பத்மநாப ஸ்வாமி பரிவுடனே அமுதுசெய்தார். முனிவர் அடைந்த இன்பத்துக்கு எல்லை இல்லை. தேவரும் காணுதற்கரிய எம்பிரான் தமக்காக அங்கே எழுந்தருளியதை நினைந்து நினைந்து உள்ளம் பூரித் தார். தேவர்கள் மலர் சொரியத் தேவ துந்துபி முழங்க, சாரணர் கந்தர்வர் சங்கீதம் பாடி நிற்க, சிறந்த புகழுடைய அனந்த பத்மநாபன் கண் வளருங் கோலத்தைக் கண்டு கண்டு தம் புண்ணியப் பேற்றை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.

அண்டம் ஈரேழும் அளந்தபாதம்

அடியான் தனக்காக அலேந்தபாதம் புண்டரீகமலர் ஒத்தபாதம்

பூமங்கை நங்கை உறையும்பாதம் கொண்ட லாழிசூழ்ந்த மலேயாளம்

கொல்லம் கொச்சியும் கோழிக்கூடும் பொங்கி வளங்கொண்ட தென்தேசத்தின்

புண்ணிய வான்களும் போற்றும்பாதம் அம்புஜ மலர்தனை ஒத்தபாதம் - அடியேன் தலையின்மேல் அணிந்தேனே! என்று கொண்டானடித்தார். பசித்தவர்க்கல்லவா உணவின் அரும்ையும் சுவையும் தெரியும்? முனிவர் இவ்வாறு பக்தி செய்து பூசை புரிந்து இறுதியில் மாயை நீங்கிப் பத்மநாபன் திருவடியில் ஐக்கியமானர். அவருக்காகத் தோற்றிய பத்மநாபன் இன்றும் திரு வனந்தபுரத்திலே எல்லா மக்களும் கண்டு இன்புறும் படி அறிதுயிலில் அமர்ந்து விளங்குகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/66&oldid=610735" இலிருந்து மீள்விக்கப்பட்டது