பக்கம்:மச்சுவீடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்சு வீடு 65

வேண்டுமே, அதன்மேல் முருகனை ஏற்றித் தியானம் செய்யும்படி செய்யவேண்டும். அதற்குமுன் அவ. னுடைய வாகனத்தைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மெள்ள மெள்ளத்தானே இந்தப் பொல் லாத மனக் குரங்கைப் பழக்கவேண்டும்? ஆகவே, நாடோடிச் சித்தன் முருகனை அடுத்தபடியாகப் பின்வருமாறு வேண்டுகிருன்: - பாவட்டஞ் சோலைக்குள்ளே-நீலமயில்

வாய்விட்டுக் கூவுதையா-அதைப் பிடித்துத் தாருங்காணும்-திருத்தணி மலேயில் வேலவனே! - தியானம் ஒருவாறு பழக்கத்துக்கு வந்துவிட்டது. சிறிது சிறிதாக அநுபூதி கைவரப் பெறுகிருன், சாதனஞ்செய்யும் அன்பன். ஒரு படியிலேயே நின்று விடலாமென்று தோன்றுகிறதா? மேல்ே மேலே போய்க்கொண்டு இருக்க வேண்டும் என்பது மனித இயல்பு: உபாசகன் இயல்பும் அதுதான். 'முருகா, உன் திருவருளால் மனம் புறப் பொருள்களிலே செல்லாமல் என் விருப்பப்படி ஒழுகும் நிலையை அடைந்தேன். பிறகு உன்னுடைய மயில்வாகனத் தையும் அதன்மேல் நீ வரும் வாழ்வையும் தியானம் செய்து இன்புறும் நிலையையும். பெற்றேன். வர வர. நான் பெறும் ஆனந்தம் சொல்லால் இயம்ப அரிதாக வளர்கின்றது. இந்தப் படிகளுக்கு மேலேயும் அநுபவ. நிலைகள் இருக்கின்றன. நான் இருக்கும் நிலை மிகத் தாழ்ந்தது. இதிலேயே இவ்வளவு சுகாதுபவம் இருக்குமானல் இன்னும் மேலேயுள்ள நிலைகளில் எவ்வளவு ஆனந்தானுபூதி இருக்கும் அதையும் நான் அடையவேண்டும். இப்போது எனக்கு உள்ள.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/71&oldid=610740" இலிருந்து மீள்விக்கப்பட்டது