பக்கம்:மச்சுவீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த அம்மானை 75.

ஏந்த அறிவேனே

இடையில் தவறிடுமோ? ஏற்றமுள்ள ஜீவன்முக்தர்

ஏசிப் பழிப்பாரோ? சொரூபநிலை கண்டவர்க்குத்

தோற்றே கிடப்பேளுே? இவ்வாறு கவலைகூரும் அவளுக்குக் குருபரத்தி எதிர்ப்பட்டு ஆடும் வகையை உபதேசம் செய்கிருள். அந்த உபதேசத்தின் வலியாலும் குருபரத்தியின் திரு. வருளாலும் அந்தச் சாதனங்கள் உள்ள சமர்த்தி' அம்மானையை ஆடி வெற்றி பெறுகிருள். இதைத். தான் வேதாந்த அம்மானை விரித்துச் சொல்கிறது.

உலக முழுவதும் பலவகையான நாடோடிப் பாடல்கள் வழங்குகின்றன. அந்த அந்த நாடுகளுக்கு. ஏற்ப அவற்றிலே தனித்தனி இயல்புகளைக் காண லாம். இயற்கையோடு ஒட்டி வாழ்வதைப் புலப் படுத்துவது, உண்மையை மறைக்காமல் சொல்வது முதலியவற்றில் அப்பாடல்கள் அனைத்திலும் ஒரு. பொது நெறியைக் காணலாம். ஆலுைம் இலக்கியங் களின் முடிவென்று சொல்லும் பாரமார்த்திக உண்மைகளை நாடோடிப் பாடல்களும் விரித்துரைக் கும் அதிசயத்தைப் பாரத நாட்டிலேதான் பார்க்க. முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/81&oldid=610750" இலிருந்து மீள்விக்கப்பட்டது