பக்கம்:மச்சுவீடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுேலயம் 77.

தின் சொரூபத்தையும், மாயையின் தன்மையையும், குருநாதன் பெருமையையும் சொல்லும் பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிருர், அவற்றில் ஒன்று. மைேலயத்தைப் பற்றியது. - -

இறைவனுடைய திருவருளால் மயக்கம் ஒழிந்து தெளிவான நிலையில் மனம் நம் வசப்படுகிறது. அது எங்கெங்கோ திரிந்துகொண்டிருப்பதுதான் இயல்பு. அதைப் பின்பற்றி நாமும் செயல் செய்து திரிகிருேம். அதன் போக்கை அடக்கி அதை நமக்கு வசமாக்க வேண்டும். அதற்கு இறைவன் அருள் வேண்டும். அது கிடைத்துவிட்டால் முன்னலே நிகழவேண்டியன வெல்லாம் நன்கு நிகழ, அவற்றின் பின் மைேலயம். தானே வந்துவிடும். மைேலயம் தானே கைகூடிய அதிசயத்தை அருணகிரிநாதர் பின்வருமாறு சொல். கிருர் .

போக்கும் வரவும் இரவும் பகலும்

புறம்பும் உள்ளும் வாக்கும் மனமும் வடிவும்இல் லாதொன்று

வந்துவந்து - தாக்கும் மனுேலயம் தானே தரும்எனத்

தன்வசத்தே ஆக்கும் அறுமுக வாசொல்லொ ளுதிந்த • . . " . ஆனந்தமே! (கந்தரலங்காரம்) திருநெல்வேலி அக்காவும் மைேலயம் பெற்று அடைந்த ஆனந்தத்தைப் பாடுகிறர். -

வர வரப் பெருகுதே-மைேலயம் வந்து வந்து தருகுதே! எப்பொழுது எப்படி அந்த மைேலயம் உண்டா கிறது? அப்போது பெருகும் ஆனந்தம் எப்படி இருக் கிறது? அந்த நிலை எத்தகையது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/83&oldid=610752" இலிருந்து மீள்விக்கப்பட்டது