பக்கம்:மணிவாசகர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புகழ்பெற இயலா மில்ட்டன்கள் பலரும் நாட்டுமக்கள் குருதி சிந்தாத க்ராம்வெல்கள் பலரும் இவண் புதையுண்டுள்ளனர்" இவ்வரிகளில் புகழ்பெற இயலா மில்ட்டன்கள் என்ற தொடர் ஆய்தற்குரியது. மில்ட்டன் 'சுவர்க்க நீக்கம்’ பற்றிக் கண்ட கற்பனை அவன் ஒருவனுக்கு மட்டும் உசித்தன்று. பலர் அதனைக் கண்டிருத்தல் கூடும். ஆனால் தாம் கண்ட கற்பனைக்கு வடிவு கொடுக்கும் ஆற்றல் அவர்கள்பால் இல்லை; ஒரு மில்ட்டனுக்கு மட்டுமே வடிவு தந்து கவிதை இயற்றும் ஆற்றல் இருந்தமையின் அவன் புகழ்பெறு மில்ட்டனாக ஆயினான். ஏனையோர் புகழ்பெற இயலா மில்ட்டன்கள் ஆயினர். அதேபோல வாதவூரர் பெற்ற மாற்றத்தையும் அனு: பவத்தையும் இன்னும் பலரும் பெற்றிருக்கலாம். ஆனால் அவர்கட்கு அந்த அனுபவத்தைக் கவிதை வடிவில் வெளி யிடும் ஆற்றல் இல்லை. திருவாதவூரர் ஒருவருக்கு மட்டுமே அஃது இருந்தமையின் திருவாசகம் ஒன்று மட்டுமே இன்று நம்மிடையுளது. இவ்விடத்திலும் பழைய மரபு வழியிலிருந்து ஒரளவு வேறுபடத் துணிகின்றேன். அடிகள் திருவாசகம் பாடிய பிறகே இறைவன் கோவை பாடுக என்று பணித்ததாக வும் பின்னரே 'திருக்கோவையார்’ பாடியதாகவும் வழங்கும் வரலாற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அகத்துறை பற்றிய நூலைத் திருவாசகம் பாடிய ஒருவர் பாடமுடியுமா என்ற வினாத் தோன்றிய பிற். காலத்தில் இவ்வாறு பாடுமாறு இறைவனே பணித்தான் என்ற கதை தோன்றி இருத்தல் வேண்டும். அமைச்சராக இருந்த காலத்திலேயே மிகச் சிறந்த புலமையும், மாபெரும் இறையன்பும் படைத்திருந்தா ராதலின் அடிகள் திருக்கோவையாரை இயற்றினாராதல் வேண்டும். அகத்துறைபற்றிப் பாடவும் அதிலும் பக்திச் 242

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/243&oldid=852695" இலிருந்து மீள்விக்கப்பட்டது