பக்கம்:மணிவாசகர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிற் பெரும்பகுதியினர் அங்ங்னம் நினைக்கின்றார்களில் லையாதலின் அவர்கள் ஒரு பொழுது உணவு கொடுத்த வனைத் தன்னுயிர் உள்ளவளவும் நினைத்துப் பாராட்டும் நாயினுங் கடையராயினர். இனி, உயிர்கட்கு இங்ங்ணம் பொதுவகையால் உதவிய தன் றயும், மக்கட்குச் சிறப்புவகையாகத் தன் திருவருள் பெற்ற பெரியார் பலர் வாயிலாகப் பல அற நூல்களையும் அறிவு நூல்கள் பலவற்றையும் அளித் தருளினர். அங்கனம் அளித்தருளிய. அங்ங்ணம் அளித்தருளிய அவ்வாண்டவன் அவற்றுள் அறநூல்களால், படைப்பு நோக்கத்திற்கு மாறு :படாமல் ஆடவர் ஒவ்வொருவரும், - - தோலுங் துகிலுக் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாக்தும் பைங்கிளியுஞ் சூலமுங் தொக்க வளையுமுடை' ய தனது தொன்மைக் கோலமேபோல நற்குணம் நிறைந்த கற்புடை மனைவியர் ஒவ்வொருவரைப் பெற்று, ஒராவிற்கு இருகோடு தோன்றி ாைற் போலும் உடலிரண்டும் உயிரொன்றுமாகி இல்வாழ் கையினின்று, அறிவறிந்த மக்களைப் பெற்று, அன்புருவின ராய், விருந்து புறந்தந்து, இன்முகமும் நன்மொழியும் தாய உள்ளமுமுடையராய், செய்ந்நன்றி மறவாதவராய், நடு நிலைமை பிறழாதவராய், அடக்கமாகிய அணிகலனை அணிந்து, ஒழுக்கத்தை உயிரினும் ஒம்பிப் பிறன் மனைவியை விரும்பி நோக்குவதிற் குருடராய் பொறை யுடைமையைப் பொன்னே போற் போற்றுபவராய், அழுக் காற்றினால் இழுக்காதவராய், வெஃகாமையை வெஃகிய வராய், புறங்கூறல், பயனிலகூறல், ஆகிய இவற்றில் மூங் கையராய், தீவின்ைக்கு மிகவும் அஞ்சி உலக நடையை யறிந்து, குறியெதிர்ப்பையின்றி வறியாற்கு வேண்டுவன கொடுத்து, புகழுடம்பு பொலிவுறுமாறு புரிந்துவாழ அறிவு இங்ஙனம் பொறிகளால் நுகரப்படும் பொருள்களை விடாது வைத்து "எல்லாம் உன்னுடைமையே எல்லாம் ss

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/38&oldid=852774" இலிருந்து மீள்விக்கப்பட்டது