உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது சரித்திரம் காதல் மணமும் கலப்பு மணமும் ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்ற கணக்கைப் பார்ப்பதைவிட, எப்படி வாழ்ந்தான் என்ற கணக்கைப் பார்ப்பதுதான் சரியானதாகும். எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்துவிடலாம். இப்பொழுதுகூட பத்திரிகைகளிலே அதிசயச் செய்திகளாக படிக்கின்றோம். ரஷ்யாவிலே 120 வயது கிழவர் ஒருவர் என்று புகைப்படம் வருகிறது. இந்தியாவிலே எங்கேயோ ஒரு கிராமத்தில் 110 வயது வரையிலே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றெல்லாம் செய்தி வருகிறது. அவர்கள் அந்தச் செய்திகளோடு மறைந்துவிடுகின்றார்கள். ஆனால், எத்தனை ஆண்டுகள் என்பதைவிட எப்படி வாழ்ந்தார்கள் என்ற முறையில் வெறும் கிழவர்கள் மாத்திரமாக மட்டும் ஆகிவிடவில்லை பெரும் சரித்திரங்களாக ஆகி விடுகிறார்கள். கொள்கையும் குறிக்கோளும் தம்முடைய கொள்கையின் உச்சிமுகட்டுக்கே செல்ல வேண்டும் என்ற பிடிவாதக்காரர் தந்தை பெரியார். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்கள் எதையும் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்பதிலே ஆர்வம் படைத்தவர். ஆனால் சென்று அடைய வேண்டிய குறிக்கோள் ஒன்றுதான். பெரியாருக்கும், அண்ணாவுக்கும் அதிலே முரண்பாடு இல்லை. கொஞ்சம் வேறுபாடு உண்டு. முரண்பாடு என்பது வேறு; வேறுபாடு என்பது வேறு. முரண்பாட்டையும் வேறுபாட்டையும் ஒன்றாகப் போட்டு யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது. முரண்பாடு என்பது எண்ணெயும் தண்ணீரையு போன்றது. இரண்டும் ஒன்டோன்று சேராது. வேறுபாடு என்பது பாலையு ம் தண்ணீரையும் போன்றது. இரண்டும் அ - ஒன்றோடொன்று சேரும். அதைப் போல பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கொள்கைகளை குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் என்பதிலே வேறுபாடான செயல்முறைகள் உண்டே தவ உண்டே தவிர, எண்ணம் ஒரே எண்ணம்தான். நாம் சென்றடைய வேண்டிய இடம் இது என்பதை அவர்கள் தீர்மானித்து வைத்திருந்தார்கள். 10