உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையால் தொட்டு எடுத்தாலே முறிந்து விடும் என்பதற்காகத்தான் தூக்காமல் போய் இருக்கக்கூடும். அறியாப் பிள்ளையான ராமன் அதனை அவசரமாகத் தூக்கிய காரணத்தால் அது உடைந்து விழுந்திருக்கக்கூடும். - - இது ராமாயணக் காலத்திலே பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்து பெரியவர்களால் நடத்தி வைக்கப்பட்ட ஒரு திருமண முறை. இடையிலே ஒரு காதல் வேறு; இரண்டும் இணைந்த முறை. நளன் - தமயந்தி தமயந்திக்கு நளனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம்; இருந்தாலும் கூட பழைய கால மன்னர் முறைப்படி சுயம்வர மண்டபம் ஏற்பாடானது. தமயந்தி நளனை மணக்காமல் தடுத்துவிட வேண்டுமென்று எண்ணிய வாயு, அக்னி போன்ற தேவாதி தேவர்கள் எல்லாம் நளனைப் போல் உருக்கொண்டு அந்த மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். ஆக பல நளன்கள் அங்கே நிற்கிறார்கள். அதிலே உண்மையான நளனும் நிற்கிறான். இவள் யாருக்கு மாலை இடுவது? தமயந்தி திகைக்கிறாள். பிறகு தமயந்தி உண்மையான நளனைக் கண்டுபிடித்துவிடுகிறாள். எப்படி என்றால் - புராணக் கருத்துப்படி தேவர்களின் இமைகள் மூடாது; விழித்தபடியே இருக்கும்; சாதாரண மனிதர்களுடைய இமைகள்தான் மூடி மூடித் திறக்கும்; இதை உற்றுப் பார்த்தாள் தமயந்தி; அக்னி, வாயு போன்ற மற்ற தேவர்கள் எல்லாம் நளன் உருவிலே நின்றாலும்கூட, அவர்களுடைய இமைகள் எல்லாம் ஆடாமல் அசையாமல் இருந்தன. உண்மையான நளனுடைய இமைகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன. அதனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனுக்கு மாலையிட்டாள். இது காதல் திருமணம். அந்தக் காதல் திருமணத்திலே நளன் பட்டபாடுகள் என்ன என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். அதற்குப் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். 700 13