உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனால் ஆடுகிறார்களே தவிர, வேண்டுமென்றே ஆடுகிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். வீரக்கதைகள் மாவீரன் - மராட்டிய மண்டிலத்தைக் கட்டியாண்ட வீர சிவாஜிக்கு அவ்வளவு வீரம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்த்தால், அவருடைய தாயர் ஜீஜீபாய், சிவாஜிக்கு வீரக் கதைகளை எல்லாம் எடுத்துச் சொன்னாள்; மாவீரர்களுடைய சரித்திரங்களையெல்லாம் எடுத்துச் சொன்னாள்; அதைக் கேட்டுக் கேட்டு மராட்டிய மண்டலத்தினுடைய மாவீரனாக சிவாஜி திகழ்ந்தான் என்று வரலாறு சொல்லுகிறது. எனவே, அப்படிப்பட்ட கதைகளுக்குத் தமிழகத்திலே பஞ்சம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புறநானூறு போன்ற வீர காவியங்கள் இவைகள் எல்லாம் எடுத்துச் சொல்லுகின்ற வீரக் கதைகளை நம்முடைய குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை அறிவு மிகுந்தவர்களாக ஆற்றல் மிகுந்தவர்களாக வீரம் மிகுந்தவர்களாக ஆக்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்வேன். ராகு காலம் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நீடாமங்கலத்திலே நடைபெற்ற திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆறு நாலைரை மணியிலிருந்து மணிக்குள்ளாக திருமணம் நடைபெறும் என்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தார்கள். 66 பிறகு நான் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு பிறகு வாழ்த்துரை வழங்குகிறபொழுது, நாலரை மணியிலிருந்து ஆறுமணி வரை ராகு காலம் என்று எவனோ எழுதிவைத்தான். அதை நீங்கள் நம்புகிற காரணத்தால்தானே அந்த நேரத்தில் என்னை வரச் சொல்லுகிறீர்கள். எனவே, நாலரை மணியிலிருந்து ஆறு மணி வரை ராகு காலம் என்று எழுதியை எதிர்ப்பதற்கு வேண்டுமானால் உங்களுடைய மனத்திடம் பயன்படும் என்று நான் பாராட்டுகிறேன். ஆனால் நாலரை மணியிலிருந்து ஆறுமணி வரை ராகு காலம் என்பதை நீங்கள் நம்பி அந்த நேரத்தில் திருமணத்தை வைத்திருக்கிறீர்கள். நான் நம்பாத காரணத்தால் ஆறரைக்கு வந்தேன் என்று சால்லி மணமகனைத் திருப்திப்படுத்தினேன். 24 99