உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்ப் புரோகிதாரா? அல்ல. அந்தப் புரோகிதர்களுக்கெல்லாம் பெரும் புரோகிதர். ரிஷிகளுக்கெல்லாம் பெரிய ரிஷி வசிஷ்டர். வசிஷ்டர் யாரை பிரம்ம ரிஷி என்கிறாரோ அவர்தான் பிரம்ம ரிஷி. அப்படிப்பட்ட வசிஷ்டர் வாயால் சொல்லப்பட்ட நாளில்தான் ராமனுக்கு மகுடம் சூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் மகுடாபிஷேகமா நடைபெற்றது? வசிஷ்டர் பார்த்த நாளில் ராமன் காடேகினான் என்று நான் சொல்லவில்லை; வால்மீகி சொல்கிறார்; கம்பர் சொல்கிறார்' கருணாநிதி சொல்லவில்லை. எனவே, நாள், நட்சத்திரம், காலம் இவைகள் எல்லாம் நாமாகக் கற்பனை செய்துகொண்டு நம்மை நாமே மூடநம்பிக்கைக்குள் புகுத்திக் கொள்கிற காரியங்களே அல்லாமல் வேறில்லை என்பதற்காகத்தான் நான் இவைகளை உங்களிடத்திலே எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். வளர்பிறையும் தேய்பிறையும் வளர்பிறையிலே திருமணங்கள் நடைபெற்றால் அது சிலாக்கியம் என்றும், தேய்பிறையிலே அதாவது பௌர்ணமி வந்த பிறகு அமாவாசைக்கு இடையிலே உள்ள காலத்திலே திருமணம் நடைபெற்றால் அது தேய்பிறை என்று சொல்வார்கள். நான் அவர்களுக்குத் சொன்னேன். தேய்பிறை வந்தாலும், பிறகு நிச்சயமாக வளர்பிறை வரத்தான் போகிறது. (கைதட்டல்) எனவே, இந்தப் பிறையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று நான் சொன்னேன். நாம் இங்கே பார்க்கிற பிறை வேறு; இதே பிறையை இதே பிறைச் சந்திரனை அமெரிக்காவிலே சென்று பார்த்தால் அது வேறுவிதமாக இருக்கும். நான் அமெரிக்காவிற்குச் சென்றவன் என்ற முறையிலே நான் அங்கு பார்த்த பிறைச் சந்திரனைப் பற்றி உங்களுக்கு விளக்க வேண்டுமானால், இங்கே தெரிகின்ற பிறைச்சந்திரன் கீழே வளைந்திருக்கின் பிறைச்சந்திரன், அமெரிக்காவிலே போய்ப் பிறையைப் பார்த்தால் அது மூன்றாம் பிறையாக இருந்தாலும், ஐந்தாம் பிறையாக இருந்தாலும் - அந்தப் பிறையைப் பார்த்தால் அது கீழே இருக்கின்ற கோடாக இல்லாமல், மேலும் கீழுமாக இருக்கின்ற கோடாக அங்கே அமைந்திருக்கின்ற காட்சியைக் காண முடிகிறது. 26