உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடக்கின்ற சுக்கிரனைப் போன்ற, செவ்வாயைப் போன்ற, புதனைப் போன்ற சனியைப் போன்ற கோள்களையெல்லாம் ஆராய்கின்ற அளவிற்கு மேல்நாட்டுக்காரர்கள் விழிப்புற்று இருக்கிறார்கள். வந்தவர்கள் நம்முடைய நாட்டில் நாம் இன்னமும் பின்தங்கிய மக்களாக இருக்கிறோம். ஏற்கனவே நாம் மற்றவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள், மற்றவர்களால் பிற்படுத்தப்பட்டவர்கள். நாமே பின்தங்கியவர்கள் அல்ல, நாமே தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. பிறரால் நாம் தாழ்த்தப்பட்டோம். பிறரால் நாம் பிற்படுத்தப்பட்டோம். யாரந்த பிறர்? எங்கிருந்தோ வந்தார்கள்; எ எப்படியேர் இங்கு குடிபுகுந்தார்கள். வந்து ஆண்டுகள் ஆயிரத்துக்கு மேலாகி விட்டன என்ற காரணத்தினால் போனால் போகிறது என்று இங்கே அவர்களை அனுமதித்துவிட்டோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களை அனுமதித்திருக்கிறோம். அப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் இங்கே இந்த நாட்டுக்கு உரிமையானவர்களை இந்த மண்ணுக்கு உரியவர்களை இந்த கலை; கலாச்சாரம், இலக்கியம், வரலாறு இவற்றுக்குரியவர்களை அடிமைகளாக தொழும்பர்களாக பொட்டுப்பூச்சிகளாக புன்மைத் தேரைகளாக வர்ணிக்கின்ற - - - னவே ஓர் அவல நிலை இங்கே ஏற்பட்டிருக்கின்றது. தான் நாம் அவர்களால் பிற்படுத்தப்பட்டோம். அவர்களால் தாழ்த்தப்பட்டோம். எனவேதான் நம்மைக் குறிக்கின்ற சொல் நாம் பிற்படுத்தப்பட்ட மக்கள்; நாம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நம்மை நாமே நொந்து கொள்ளவேண்டிய ஒரு சோகமயமான சூழ்நிலைக்கு நம்முடைய நாடு நம்முடைய இனம் நம்முடைய சமுதாயம் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. இவைகளிலே இருந்தெல்லாம் நமக்கு விமோசனம் கிடைக்க வேண்டாமா? என்ற கேள்விக்குறி எடுத்த விசுவரூபம்தான் தந்தை பெரியார் இராமசாமி என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. பஞ்சாங்கப் படைக்கலம் பஞ்சாங்கம் இன்றைக்குச் சில பேருடைய பிழைப்பிற்கு வழிகாட்டியாக மாத்திரமல்ல ஒரு பெரிய சமுதாயத்தை ஏமாற்றுவதற்கான படைக்கலமாகவு ம் றிவிட்ட காரணத்தினாலேதான் பஞ்சாங்கத்தின் மீது நாம் வெறுப்புக் 28 -