பக்கம்:மணி பல்லவம் 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

மணிபல்லவம்


படி மதமாகப் பெருகிவிடும்போது அதை அந்த விநாடி வரை வளர்த்து வந்தவன் பரிதாபத்துக்கு உரியவனாகி விடுகிறான். கல்வியின் மிகுதி காரணமாகவும் மனித மனத்தில் பெருமிதம் உண்டாகலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீரத்துக்குத்தான் பெருமிதம்' என்பது மற்றொரு பெயர். பெருமிதமாவது மற்றவர் களினும் உயர்ந்துதான் பேரெல்லையில் நிற்றல். அறிவாளியாக இருப்பவன் பேரெல்லையில் நிற்பதை மற்றவர்கள் உணர்ந்து அவன் உயரத்தையும் தங்கள் தாழ்வையும் நினைத்து வியப்பதுதான் நியாயமான பெருமிதம். அப்படி இல்லாமல் நான் பேரெல்லையில் உயர்ந்து நிற்கிறேன் - என்று பெருமிதத்துக்குச் சொந்தக்காரனே தன்னை வியந்துகொள்ள முற்படும் போதுதான் பெருமிதம் மெல்ல மெல்லப் பெருமதமாக மாறுகிறது - என்று எண்ணியவனாக நெருப்புப் பிடித்த வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்தவரைப் போன்ற அகங்கார மதத்திலிருந்து விடுபடத் துடித்த முகுந்தபட்டரின் முகத்தை நினைவுக்குக் கொணர்ந்து வந்தபடியே சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.

மருள் மாலை நேரத்துக் கடற்காற்று ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மரங்களையும், செடி கொடி களையும் அவற்றின் காய், கனி, பூங்கொத்துக்களையும் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தது. இளங்குமரன் படைக்கலச் சாலையின் தோட்டத்தில் நினைவுகள் வரிசையாய் அடுக்கும் மனநிலையோடு உலாவிக் கொண்டிருந்த்ான். மண்ணில் கூந்தலை • தரையில் சுருண்டு கொடியோடிப் பரந்து படர்ந்தி

திருந்த அறுகம்புல் வெளியில் புள்ளி மான்கள். : கொண்டிருந்தன. அந்த மான்கள் தலை நிமிரும்போது தற்செயலாய் அவற்றின் கண்கள் மட்டும் தனியாக நகர்ந்து முன் வருவன போல் தோன்றும் அழகை இளங்குமரன் கண்டான். இன்னொரு புறம் இந்த மண்ணின் எண்ணற்ற அழகுகளைக் காண்பதற்காகவே தன் வண்ணத் தோகையெல்லாம் கண்ணாகி நின்றாற் போல் மயில் ஒன்று கலாபம் விரித்து ஆடிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/118&oldid=1144507" இலிருந்து மீள்விக்கப்பட்டது