பக்கம்:மணி பல்லவம் 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

573


பார்த்தது. குனிந்து அந்த மானின் கண்களைப் பார்த்த இளங்குமரன் முல்லையைப் பார்க்கவில்லையானாலும் அவள் கண்களிலும் அதே மருட்சி கலந்த அழகுதான் அப்போது இருக்குமென உணர்ந்தான்.

20. புதிய மனமும் பழைய உறவுகளும்

| முல்லையின் முகத்தையும் அந்த முகத்திலிருந்து பருகுவது போன்ற ஆர்வத்தோடு தன்னை இமையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் கண் களையும் எதிரே நேருக்கு நேர் ! நிமிர்ந்து காணத் தயங்கியவனாகத் தங்கள் இருவருக்கும் நடுவில் நின்று . . . . . . . . . . கொண்டிருந்த மானின் கண்களை நோக்கியபடியே அவளோடு பேசினான் இளங்குமரன். "முல்லை! பூக்களைப்போல சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின் வாடி உதிர்ந்து தளர்வதும் குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம். பூக்கள் பூப்பதற்குப் பருவம், நேரம் முதலியன காரணமாவதுபோல இந்த உடம்பில் அழகு பூக்கும் பருவங்களும் சில உண்டு. உடம்பை வாகன மாகக் கொண்டு இயங்கும் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அழகும் கவர்ச்சிகளும் பூத்துப் பொலிகின்ற பருவங்கள் மிகவும் குறுகியவை. பூக்களுக்கும், நேர்த்திற்கும் சேர்த்துத் தமிழில் ஒரே சொல்லாக வாய்த்திருப்பது போது' என்ற பதம். நேரத்தோடு மலரும் பண்பைக் குறிப்பதற்காகவே பூக்களுக்கும் போது என்று பெயரிட்டார்கள் போலிருக்கிறது, பவழமல்லிக்ை இரவிலேயே பூத்து விடுகிறது. தாமரை கதிரவனைப் பார்த்த பின்பே முகம் மலர்கிறது. குமுதப்பூ மாலையில்தான் மலர்கிறது. ஒவ்வொரு மலரும் தன்னுடைய போது தவறாமல் பூக்கும் இயல்பை நினைத்துக் கொண்டு பார்த்தால்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/123&oldid=1144512" இலிருந்து மீள்விக்கப்பட்டது