பக்கம்:மணி பல்லவம் 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

579


கூட்டமாக ஆடவர்கள் வருவதைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் எழுந்து விலகி நின்று கொண் டார்கள். தன் தமையன் கதக்கண்ணனைப் பார்த்தவு டனே முல்லைக்கு ஒருவிதத்தில் ஆறுதல் பிறந்தது. நீலநாக மறவரோடு பேசிக்கொண்டே உலாவப் போயிருக்கும் தன் தந்தை திரும்பி வருவதற்குச் சிறிது தாமதமானால் தான் தன் அண்ணனோடு வீடு திரும்பி விடலாமென்று எண்ணிக் கொண்டாள் முல்லை. புதிய சிந்தனைகளோடு கூடிய தன் மனத்தைக் கொண்டு பழைய நண்பர்களிடம் எப்படி எதை உள்ளம் திறந்து பேச முடியுமென்ற தயக்கம் அப்போது இளங் குமரனுக்கு ஏற்பட்டது.

21. மயானத்தில் நடந்தது

ஆலமுற்றத்துக் கடற்கரையில் நடந் தவாறே மிக முக்கியமான செய்தி களைப் பேசிக் கொண்டிருந்தார்கள் வளநாடுடையாரும் நீலநாக மறவரும். வளநாடுடையார் ஆத்திரமாக மீசை துடிதுடிக்கப் பேசலானார். or 'ஒவ்வொரு கணமும் நீங்கள் * அந்தப் பிள்ளைக்குக் காவலாயிருக்க வேண்டும் ஐயா! நாளங்காடியில் இன்று காலையில் நடந்த சூழ்ச்சியை நினைத்துப் பார்த்தால் இப்போதுகூட என் மனம் கொதிக்கிறது. நடந்தவற்றை ஒவ்வொன்றாக இணைத்துத் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணமாக ஏதோ ஒரு வலிமை யான சூழ்ச்சி பின்னாலிருந்து இயங்குவதாகத் தெரிகிறது. "வலிமையாவது சூழ்ச்சியாவது? நான்தான் உன்னுடைய எதிரி! என்று நேர் எதிரே முன்னால் வந்து நின்றுகொண்டு கையை ஓங்குவதற்குத் துணி வில்லாத வலிமையும் ஒரு வலிமையா? சூழ்ச்சியை நாடி அதற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/129&oldid=1144518" இலிருந்து மீள்விக்கப்பட்டது