பக்கம்:மணி பல்லவம் 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

525


முடியும் என்று நீங்கள் கூறியது தவறு. இதோ வாழ்விலேயே என் கண்முன் உங்களை அப்படி உத்தம ராக நான் காண்கிறேனே!” என்று அவனிடம் சொல் வதற்கு அவள் நாவு துடித்தது, ஆனால் சொல்வதற்கு வேண்டிய வார்த்தைகள் வரவில்லையே, அவள் தவித்தாள். ‘. . . . .

'இதென்ன அநியாயமடி, வசந்தமாலை? பூக் கூடையில் பாம்பு எப்படி வந்தது?" என்று பேயறைந் தாற்போல் அரண்டுபோய் நின்று கொண்டிருந்த வான வல்லி வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்டாள். 'ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது, அம்மா. யார் செய்ததென்றுதான் சொல்லமுடியவில்லை. நான் இதை அப்போதே நினைத்தேன். ஒருநாளும் இல்லாத திருநாளாய் உங்கள் தந்தையார், இங்கே போய் வருமாறு நம்மை அனுப்பியபோதே இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது' என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே முணுமுணுத்தாள் வசந்தமாலை. - - --

இடது கையை நெற்றிக் காயத்தின் மேல் வைத்து அடைத்துக்கொண்டு, புன்னகை குன்றாத மலர்ச்சி முகமெங்கும் முன்போலவே இலங்க இளங்குமரன் சுரமஞ்சரியைப் பார்த்தான். மெல்ல வலது கையை உயர்த்திச் செந்தாமரைப் பூவின் உள் இதழ் போன்ற அகங்கையை அசைத்து நீங்கள் போகலாமே என்று குறிப்பைப் புலப்படுத்தினான். அவள் அதைப் புரிந்து கொண்டாலும் தயங்கி நின்றாள். கண்களிலும் இதழ்களிலும் எதையோ பேசவேண்டுமென்ற உணர்வும் தயங்கி நின்றது. -

"நான். நான். ஒரு பாவமும் அறியாதவள். இப்படி யாரோ சூது செய்திருக்கிறார்கள். என்னை மறுபடியும் மன்னிக்க வேண்டும்”-அவள் சொற்களைக் குழறினாள். தண்ணிரில் நனைந்த புதிய பட்டுப்போல் முழுமை தோயாமல் சொற்களைப் பேசியது அவள் சோகம். அவன் நன்றாக வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/75&oldid=1144425" இலிருந்து மீள்விக்கப்பட்டது