பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' - என்ற பாரதியாரின் நல்வாக்கை நச்சுவாக்கென நவில்பவர்கள்! எங்கிருந்து இந்த எண்ணம் பிறந்தது - எப்படிப் பிறந்தது என்பதை விளக்கி விட்டேன். ஏன் பிறந்தது? இதைக் கேட்க மாட்டீர்கள்! கொள்கையைத் தவிர, வேறெதை நினைக்க முடிகிறது - எழுத முடிகிறது என்னால்! எழுதினேன், திராவிட சமுதாயத்திற்குத் தேவையான படைக்கலன்களில் ஒன்றாக அமையட்டுமென்ற ஆசையுடன்! கதையின் காலம் : வாளும் வேலும் படைக்கருவியாய் - பனை ஓலையை எழுத்துச் சாதனமாய் இருந்த பழைய காலமல்ல! பாளையக்காரர் உலவிய இடைக் காலமுமல்ல; இடைக்காலம் நவீன காலத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் காலம் - அதையே பின்னணியாக வைத்திருக்கிறேன். இந்த நாடகத்தை நூல் வடிவிலே நான்காம் பதிப்பாகத் தரும் உரிமையைத் தமிழ்க்கனிப் பதிப்பகத்திடம் பெற்று வெளியிடும் பாரதி பதிப்பக நண்பர் பழ.சிதம்பரம் அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக. 22.7.1986 அன்புள்ள மு.கருணாநிதி கை
பக்கம்:மணி மகுடம்.pdf/13
Appearance