கலைஞர் மு. கருணாநிதி 9 வரவில்லை. சே! இதை விற்றுப் பிழைப்பது மானத்தை விற்றுப் பிழைப்பது போல! (பத்திரிகை கட்டுகளை தூர எறிகிறான். இந்த நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் தூர இருந்து கவனித்த பொன்னழகன் இவர்களிடம் நெருங்கி வருகிறான்) வி.மனிதன்: யார் நீங்கள்? பொன்னழகன்: புதுமை நிறைந்ததும் - நாட்டுப் பற்று மிகுந்ததுமான உங்கள் உரையாடலைக் கேட்டுக் களிப்புற்ற ஒருவன் - நீங்கள் யார்? வி.மனிதன்: நான் ஒரு நாடோடி! பொன்: பெயர்? வி.மனிதன்: புதுமைப்பித்தன். பொன்: பொருத்தமான பெயர் - புதுமைப்பித்தரே! மணிமகுடபுரிதானே தங்களின் சொந்த நாடு... பின் புதுமைப்பித்தன்: ஆமாம்... தாங்கள்? பொன்: பொன்னழகன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புதுமை: யார்? பொன்னழகன் - பொதுமக்கள் தலைவர் பொன்னழகன் - நீங்கள் தானே? குள்: அடடே நீங்களா? நான் பொதுக்கூட்டத்தில் பார்த்திருக்கிறேன் - அடையாளம் தெரியாமல் போய் விட்டது...? புதுமை: கிடைத்தற்கரிய வாய்ப்பு! உங்களைப் போன்ற உத்தமர்களை சந்திப்பதும் உரையாடுவதும் எத்தனை உற்சாக நிகழ்ச்சி தெரியுமா? பொன்: அதைப்போலவே நானும் மகிழ்கிறேன். ஒரு ராஜாங்க விரோதியை சந்திக்கிறோம் என்ற எண்ணத்தில்! புதுமை: நாமெல்லாம் அரசாங்கத்தின் விரோதிகள் மக்களுக்கு நண்பர்கள்; அவ்வளவுதான்! அல்லவே
பக்கம்:மணி மகுடம்.pdf/18
Appearance