உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி காட்சி 2 11 (ஏழை மக்கள் வாழும் குடிசைகள். இருளைப் (ஏழை போக்குவதற்காக அவர்கள் வீடுகளில் மின்மினி போன்ற விளக்குகள், குடிசைகளின் வெளிப்புறங்களில் படுத்திருப் போரும் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை பேசுவோருமாக எலும்பு உடலினர் பலர். அந்தப் பக்கம் பொன்னழகன், புதுமைப் பித்தன், கருப்பு ரோஜா மூவரும் வருகிறார்கள். பொன்னழகனைக் கண்ட ஏழைகள் அனைவரும் எழுந்து ஆவலுடன் அவனைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். "தலைவர் அய்யா வந்துவிட்டார்; தலைவர் அய்யா வந்துவிட்டார்” என்று கூறிக் கொண்டே பொன்னழகனை வணங்குகிறார்கள்) பொன்: என்ன ஏதாவது புதிய செய்திகள்....? ஒரு கிழவர்: இல்லாம இருக்குமா? பக்கத்துக் தெருவிலே ஏழு பேருக்குப் பேதி கண்டு இரண்டு தீர்ந்து விட்டது... நாலு பிழைக்கிறது சந்தேகம். பொன்: பேதியா? நேற்று வரும்போது நான் கேள்விப்படவில்லையே - அரசாங்க வைத்திய இலாகாவுக்குச் சொல்லி அனுப்பினீர்களா? கிழவர்: சொல்லி அனுப்பினோம். கவனிக்கிறோம் என்று சொன்னார்கள். பொன்: கவனிப்பார்கள். எத்தனை பிணம் போகிறது என்று கவனித்துக் கொண்டிருப்பார்கள். பெரியவரே, காலையிலேயே எனக்காவது சொல்லி அனுப்பியிருக்கக் கூடாதா? கிழ: சொல்லி அனுப்பினோம். நீங்கள் இல்லையென்று சங்கத்திலிருந்து அல்லியம்மாவும், நாலைந்து தொண்டர்களும் வந்து, தேவையான உதவிகளை எல்லாம் செய்தார்கள். பேதி தடுப்பு மருந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள். அரசாங்க வைத்திய இலாகாவுக்கு - அவர்களும் அவசரச் செய்தி அனுப்பினார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/20&oldid=1706417" இலிருந்து மீள்விக்கப்பட்டது