உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 29 அதற்குப் பெயர் ஆலயமென்றா கூறுவார்கள், அறிவுடையோர்! ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்படும் மலர்களிலே ஆயிரம் வீட்டுக்காரர்கள் சிந்திய ரத்தக்கறை படிந்திருக்கும்! அவனுக்குக் காட்டப்படும் தூப தீபங்களிலே தாய்மார்களின் துயர முகந்தான் தெரியும் - தூய ஜோதி தெரியாது! பச்சரிசிப் பொங்கலும், பாயசமும் படைப்பீர்களே ஆண்டவனுக்கு அந்தப் பொங்கல் பச்சை சிசுக்களின் உடலைப் பொடியாக்கி செய்யப்படும் நைவேத்தியமாகத் தானிருக்கும்! ஆலயத்து மணியிலே தெய்வீக ஒலி கிளம்பாது அமைச்சரே! அனாதையாக விடப்பட்ட ஆயிரம் குடிசைகளின் சோகத் தொனிதான் கிளம்பும்! பக்தி ரசக்கீர்த்தனை கேட்காது பகவான் சன்னிதானத்திலே. வாழ்விழந்த பாட்டாளிகளின் ஒப்பாரி கேட்கும்! புலம்பல் கேட்கும்! அழுகுரல் கேட்கும்! தேவாலயம், தேம்பி அழுவோர் பெருகிவிட்ட பிணக்காடாகும் - சுடுகாடாக மாறும் - மயான பூமியாகத் திகழும்! வேண்டாம் ஆண்டவன் கோயிலில் அழுக்கும் இழுக்கும் வேண்டாம் -ஆண்டவன் பெயரால் ஆண்டவனுக்குக் களங்கம் தேடாதீர்கள்! - குண: நிறுத்து! இனியும் பேசினால் - நிதானமிழப்போம்- கைது செய்ய வேண்டியநிலை பிறக்கும். தீர்மானம் நிறைவேறப் போகிறது. அமைதியாக இருக்க முடியுமானால் உள்ளே அனுமதிக்கிறேன், இல்லையானால்... புது: நாங்கள் வெளியேறுகிறோம்! அமைச்சருக்கு சிரமம் வேண்டாம்! ஆண்டவனே! நீ இருந்தால் கேள் இந்த அக்கிரமக்காரர்களை! அய்யோ - ஆயிரம் வீடுகளை எரித்து விட்டு, இங்கே நீ இருந்து சிரிக்கப் போகிறாயாமே, அடுக்குமா, உனக்கு இந்த அநியாயச் செயல்? சிரி! நன்றாகச் சிரி! ஏழைகளின் கண்ணீரில் நீந்திக் கொண்டே சிரி! ஏழைகள் சமுதாயமே-நீ அழு! ஆண்டவன் சிரிக்கப்போகிறான் - அந்தரத்திலே, இருக்க இடமின்றி தொங்கும் அவனுக்கு அரசாங்கத்தார் ஆடம்பரமான ஆலயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/38&oldid=1706435" இலிருந்து மீள்விக்கப்பட்டது