குறிஞ்சி சுப்ரமணியன் உரிமையாளர் - குறிஞ்சி பர்னிச்சர், 14, வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், 48, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சாலை, (எல்.பி. ரோடு அடையாறு, சென்னை - 20 தொலைபேசி : 24902541, 24919944 அன்புடையீர், வணக்கம். முத்தமிழ் அறிஞர் பாக்டர். கலைஞர் அவர்கள் நமக்கு படைத்தளித்த வரலாற்று நாடகங்களில் சிறப்பான ஒன்று 'மணி மகுடம் நாடகம். 1956 மே திங்களில் திருச்சியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் குழுவினர் 'மணிமகுடம்' நாடகத்தை சீரிய முறையில் நடத்தினர். அந்த மாநாட்டில் பார்வையாளனாகக் கலந்து கொண்ட பள்ளி மாணவனான எனக்கு அந்த நாடகத்தைக் காணும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் மன்னன் மணிமாறன், புதுமைப்பித்தன் ஆகிய இரண்டு வேடங்களிலும், நடிகமணி டி.வி.நாராயணசாமி மக்கள் தலைவர் பொன்னழகன் வேடத்திலும் இன்றைய ஆச்சி மனோரமா அல்லி வேடத்திலும் சிறப்பாக நடித்தார்கள். கல்லூரிப் படிப்பை முடித்தபின் என் சொந்த ஊர் சின்னாளப்பட்டியில் அப்போதைய மதுரை மாவட்டத்திலும், தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ள ஊர் சிறிது காலம் தங்கியிருந்தேன். கல்லூரி வாழ்க்கையில் மாணவர் மன்றத் தலைவனாக கழகப் பணியாற்றிய நான் எனது ஊரிலும் கழகப் பணியைத் தொடர்ந்தேன்.
பக்கம்:மணி மகுடம்.pdf/4
Appearance