உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மணிமகுடம் (அல்லி, புதுமைப்பித்தன் போவதையை பார்த்துக் கொண்டிருக்கிறாள் - இதுவரையில் ஒரு மூலையில் மௌனமாக உட்கார்ந்திருந்த கவிஞர் திடீரென உரக்கப் பாடுகிறார்) "அணையுடைத்துவரும் ஆற்றையும் நம்பலாம்! புயல் காற்றையும் நம்பலாம்! சீறிவரும் பாம்பையும், செந்தேளையும் நம்பலாம் இந்த சங்கத்தில் நுழைந்து விட்ட புதுமைப்பித்தன் என்னும் பொய்யனை நம்ப லாகாதே! (மன்றத்தினர் திகைப்பு) அல்லி: என்ன? (திகைப்பு) பொன்: கவிஞரே! (ஆச்சரியம்) கவிஞர்: நெருப்பிலே நீர் கொட்டினானே, அவன் நேர்மையின் திருவுருவம் என்று எண்ணாதீர்கள்!... அல்லி: என்ன சொல்கிறீர்கள் - புதுமைப்பித்தனைப் பற்றி.. கவிஞர்:அமைதியின் வடிவமல்ல அவன்; ஆபத்தின் சொரூபம்! அரசாங்கத்து ஒற்றன்! பொன்: ஆ.. அரசாங்கத்து ஒற்றன். கவிஞர்: ஆமாம்... நானே நேரில் பார்த்தேன்! அவன் மீது எனக்கேற்பட்ட சந்தேகம் தெளிவாயிற்று.. அரண்மனைப் பக்கம் அடிக்கடி போய் வருகிறான் என்று கேள்விப்பட்டேன். பின் தொடர்ந்தேன். நேற்றிரவு அவன் அரண்மனைக்குள் நுழைந்ததை நானே கண்டேன் - இதில் ஐயத்திற் கிடமேயில்லை! பொன்: ஆகா! ஏமாந்து விட்டோம் - அவசரப்பட்டு மன்றத்திலும்அவனை உறுப்பினராக்கி விட்டோம்- நல்ல வேளை இப்போதாவது எச்சரிக்கை செய்தீரே! கவிஞரே மிக நன்றி! மிக நன்றி! அல்லி: எனக்கென்னமோ புதுமைப்பித்தனை அரசாங்க ஒற்றன் என்று கூற முடியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/43&oldid=1706440" இலிருந்து மீள்விக்கப்பட்டது