40 மணிமகுடம் அர: வேண்டாம்! என் கையெழுத்தை களங்கப்படுத்திக் கொள்ள மாட்டேன்... விளக்கம் கேட்காதீர்! விசேஷ அதிகாரத்தை உபயோகித்து, கோயிலைக் கட்ட முடியும்! (அரசன் உள்ளே போய்விடுகிறான் - மெய்க் காப்பாளனும் போகிறான், அரசனுடன். அமைச்சர் ஆழ்ந்த யோசனையுடன் நிற்கிறார்) குண: (தனக்குள்ளாக) "கையெழுத்துப் போட வில்லை! விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்து!" இப்போது அரசனிடம் கோபித்துக் கொண்டால், கலாராணி விஷயம் வெற்றிகரமாக முடியாது! அதற்காக கோயில் தீர்மானத்தையும் கைவிட முடியாது!சரி, அரசன் கையெழுத்திட்டு விட்டதாகவே பொய்ப் பிரச்சாரம் செய்கிறேன். இருக்கவே இருக்கிறது - மக்கள் தொண்டன் பத்திரிகை! வேறு வழி இல்லை..! வழியே இல்லை..! (அப்போது மெய்க்காப்பாளன் வந்து) மெய்: வழி ஏன் இல்லை? பிரபு இதோ இருக்கிறதே வழி - வெளியே போகத்தானே பிரபு? குண: சீ.. முட்டாளே! வழி சொல்ல வந்துவிட்டான், வடிகட்டிய முட்டாள்! (போகிறார் வேகமாக) காட்சி 9 (மணிமகுடபுரி வீதிகளில் ‘மக்கள் தொண்டன்' ஏடு விற்பனையாகிறது) ஏடு விற்போன்: சீமான் சபை தீர்மானத்தில் அரசர் கையெழுத்துப் போட்டு விட்டார். தேவாயம் கட்ட தீவிர ஏற்பாடுகள் - அமைச்சர் அறிக்கை! தேவாலய வரி விதிக்கப்படும்! - குருநாதர் எழுதுகிற தெய்வீகக் கட்டுரையுடன், மக்கள் தொண்டன் விலை இரண்டு பணம்! மக்கள் தொண்டன் விலை இரண்டு பணம்!
பக்கம்:மணி மகுடம்.pdf/49
தோற்றம்