102 மண்ணியல் சிறுதேர் குறைகள் என்று டாக்டர் பாரதியார் குறிப்பிட்டுள்ளார். மதியிடத்திலும் மறு உண்டல்லவா? மனிதனாகப் பிறந்த சாருதத்தனிடம் ஓரிரண்டு குறைகள் காணப்படுதல் இயல்பே. "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் என்பது வள்ளுவம். நடுநிலையில் நின்று உண்மையைக் காண்போர் சாருதத்தனிடம் குறையைக் காட்டிலும் குணம் ஓங்கி உயர்ந்து விளங்குகிறது என்று ஒப்புக்கொள்வர். எனவே சுருக்கமாகச் சாருதத்தனின் பண்பைச் சம்வாககன் சொற்களால் படம்பிடித்துக் காட்டுவோம்: 'அப்பெருந் தகையினரோ காண்டற்கு எல்லோராலும் விரும்பத் தக்கவர்; இன்சொலாளர்; தம் கொடைப் பெருமையைப் பிறரிடங்கூறுபவர்அல்லர் நன்றல்லது அன்றே மறப்பவர். பலவாறு விரிப்பதென்? கண்ணோட்டத்தால் தம் உடல் பொருள் முதலிய எல்லாம் பிறர்க்கு உரியனவென்றே உணர்ந்தவர்; அடைக்கலம் புகுந்தார்க்கு அருள் செய்யும் வள்ளல்' இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் சாருதத்தன் அகழ்வாரைத் தாங்கும் நிலம்; எல்லார்க்கும் பெய்யும் மழை, ஒழுக்கமாம் படுகரை கடவாக் கடலே!! I வசந்தசேனை வசந்தசேனை, உச்சயினி நகரத்தின் மாதவி!
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/103
Appearance