IG6 மண்ணியல் சிறுதேர் நாள், விசிறியை எடுக்கச் சென்ற தன் சேடி மதனிதை சருவிலகனோடு கண்ணால் காவியம் எழுதி: கொண்டிருக்கக் கண்டு 'இன்புறுக, யாருக்கும் இன்பம் குறைவுறுதல் வேண்டா. அழைப்பேன் அல்லன்: என்கிறாள் மதணிகையைச்சருவிலகனிடம் கைப்பிடித்துக் கொடுக்கிறாள் எத்துணை அருள் உள்ளம்1 வசந்தசேனை பெயருக்கேற்ற விதத்தில் 'இளவேனிற் பொலிவுடையாளாக விளங்குவதோடு இதயப் பொலிவு டையாளாகவும் விளங்குகிறாள். விடன், வசந்தசேனை இறந்துவிட்டதாகக் கருதி “நாகரிக நீர் நிறைந்த நதியைக் காணேன்' என்று பாடும்போது நாமும் நெஞ்சம் நெகிழ்கிறோம். தொடக்கத்தில் சாருதத்தன், வசந்தசேனையின் மாட்சி யையுணர்ந்துதான் 'இம்மங்கை தேவர்களுடன் கூடுதற்குத் தகுதியுடையவள் (1) என்று சொல்கிறான். நம்மைக் கேட்டால் 'இம்மங்கை சாருதத்தனுடன் கூடுதற்குத் தகுதியுடையவள்" என்றுரைப்போம், இல்லையா? H1 சகாரன் உச்சயினி நகரத்தின் அலங்காரம் சாருதத்தன் என்றால் விகாரம் சமத்தானகன் என்னும் சகாரன்! மனிதன், வரபுருடன், வாசுதேவன், மணிக்குடத்தை ஒத்தவன், தொன்னை போன்ற பெரிய குலத்திற் பிறந்தவன்.இவ்வாறு தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் சகாரனுக்குரிய ஒரே தகுதி - ஒரே பட்டம்
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/107
Appearance