II4 மண்ணியல் சிறுதேர் ஒதெல்லோ நாடகத்தின் இறுதியில் குற்றவாளியாகி நிற்கும் இயாகோ தன் தோல்வியை பெரிதாகக் கருதி எதுவும் பேச மறுக்கிறான்; தன் ஆன்மாவையும் உடலையும் ஏன் இயாகோ வஞ்சித்தான் என்று ஒதெல்லோ அறிய விரும்பும்போது 'என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எதை அறிய வேண்டுமோ அதை அறிவீர்கள். இந்த நிமிடம் முதல் என் வாயைத் திறக்க மாட்டேன்' என்கிறான். இந்த அளவுக்காவது இயாகோ பேசுகிறான். மனோன்மணிய நாடகத்தின் இறுதியில் கைது செய்யப்பட்டு நிற்கும் குடிலனோ இவ்வளவுகூடப் பேசவில்லை. "படபடத்திடு நின் பாழ்வாய் திறவாய்' என்று நாராயணன் கேட்கும் போதும் வாயைத் திறக்க மறுக்கிறான்; மெளனியாகிறான். இயாகோவைப் போல் குடிலனைப்போல் தன் தோல்வியை ஒரு வீரனுக்குரிய தோல்வியாகக் கருதிச் சகாரனால் வாய்மூடி நிற்க முடிய வில்லை. தன் மைத்துனன் பாலகன் இறந்ததறிந்தும் தன் உயிரை வைத்துக் கொண்டிருக்க விரும்புகிறான். பகை வனிடம் - சாருதத்தனிடம் - உயிர்ப்பிச்சை பெறுகிறான். சகாரனுக்கு அவன் உயிர்தான் வெல்லம்! - இத்தகைய சகாரனை மனிதன் என்று சொல்வதைக் காட்டிலும் மரம் என்று சொல்வதுதான் சரி. அவனே தன்னை 'முருக்கமரம்' என்கிறான். வசந்தசேனையோ
- othello: .....demand that demi-devil
Why he hath thus ensnared my soul and body? Iago: Demand me nothing. What you know, you know. From this timeforth I never will speak word. - Shakespeare, Othello, Act. V. Sc. II.