- ஒரு மதிப்பீடு II 7 அந்தணர்கள் எனலாம்.' நாடகத்தில் வரும் பிற மாந்தர்கள் விதூடகனை மகாப்பிராமணன் என்று புகழ்வதைப் போல் பழித்துரைப்பது வழக்கம். சகாரனை அடிக்க விறகுக்கழியை எடுக்கும் மைத்திரேயனை விடன் 'மகாப்பிராமண பொறுத்தருள்க' என்கிறான். தன்னிடத்தில் பொற்பணி முடிப்பைக் கொடுத்துவிட்டுத் தூங்கும் மைத்திரேயனைச் சருவிலகன் 'மகாப்பிராமண! நூறுயாண்டு உறங்குவாயாக’ என்கிறான். மைத்திரே யனும், தான் பெயரளவில்தான் ஓர் அந்தணன் என்று ஒப்புக் கொள்கிறான். இரேபிலன் பாட்டைக் கேட்டு நடுநிசிக்குப் பிறகு வீடு திரும்பும் சாருதத்தனுக்குக் கால் கழுவ நீர் தருகிறான் சேடன். அவனிடம், மைத்திரேயனுக்கும் நீர் கொடுக்குமாறு கட்டளையிடுகிறான் சாருதத்தன். அப்போது 'எனக்குப் பாதோதகத்தாற் பயனென்? யான் சுமை முதலியவற்றால் வருந்திய கழுதையைப் போல் மீண்டும் நிலத்திற் புரளவேண்டும்' என்கிறான் மைத்திரேயன். 'ஐய! மைத்திரேயரே! அந்தணரன்றே தாங்கள்' என்று சேடன் நினைவுபடுத்துகிறான். உடனே 'பலவிடப் பாம்புகளின் நடுவே நஞ்சில்லாத நீர்ப்பாம்பு போலப் பல அந்தணர்கள் நடுவில் யானும் ஒர் அந்தணன்' என்று தன்னைப்பற்றி நகைம்ொழி பகர்கிறான். தன்னை நீர்ப்பாம்பு, ஊரேறு, க்ழுதை, பெருச்சாளி என்று வருணித்துக் கொள்கிறான் மைத்திரேயன். இடை யிடையே தன்னை ஒர் அந்தணன் என்றும் சொல்லிக் கொள்கிறான். அவ்வளவுதான் அவனால் முடியும் பூணுரலைப் பெருமையாகப் போற்றவோ, தெய்வத்தை f Vidusaka, however, is a Brahmana only in name. There is nothing in him that can claim real Brahmanahood for him. In fact he is a degraded Brahmana. - J.T. Parikh, Vidusaka, Theory and Practice, P.21.
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/118
Appearance