- ஒரு மதிப்பீடு II9 சூழ்நிலையை மாற்றக் கருதிப் பரிகாசமாக "பெருமாட்டி யான் நீராடுங்கால் உடுத்தும் என் ஆடையைத் தரல் வேண்டும்' என்று வசந்த சேனையிடம் கேட்கிறான். அணிகலன்களை முடிந்து வைத்திருந்த அவனுடைய ஆடை நீர்க்காவி ஏறிய ஆடை பழைய ஆடை அது 'இப்போது வசந்தசேனையிடம் இருக்கிறது. அதைக் கேட்கிறான் மைத்திரேயன். சாருதத்தன் பரிசு கொடுக்க முடியவில்லையே என்று வருந்தும்போது 'பழைய ஆடையைத் தாருங்கள் என்று மைத்திரேயன் கேட்பது யாருக்கும் சிரிப்பை உண்டாக்கத்தானே செய்யும்? இங்ங்னம், புழுக்கமான சூழ்நிலையில் தென்றல் வீசச் செய்கிறான் மைத்திரேயன். பிற நாடகங்களில் வரும் விதுரடகர்கள்ைக் காட்டிலும் மைத்திரேயன் நம்மை அதிகம் கவருகிறான். நகைப்பை விளைவிக்க வேண்டுமென்பதற்காகச் சிலநேரங்களில் அவன் அறிவில்லாதவன் போல நடிக்கிறானேயொழிய உண்மையில் அறிவாற்றல்மிக்கவன். 'பரிகாசம் செய்ததற் குரிய இடம் காலம் இவை அறியாதவனா? (III) நன்றாய் அறிந்துள்ளவன். குறிப்பாக எதையும் உணர்த்தும் திறன் உள்ளவன். வசந்தசேனை ஏனைய கணிகையரைப் போல் இருப்பாளேயானால் சாருதத்தன் அவளிடம் அல்லற்பட வேண்டுமேயென்று அஞ்சுகிறான். தன் அச்சத்தை, வீட்டில் விளக்குகளை ஏற்றச் சாருதத்தன் கட்டளையிடும் போது மெதுவாக வெளிப்படுத்துகிறான். "ஆ, முன்னர் எண்ணெய் நிரம்பிய அத்தகைய விளக்குக்கள் இப்பொழுது வறுமைமிக்க காமுகர்களை வெறுத் தொதுக்கும் விலைமகளிர் போல நேயமற்றிருக்கின்றன’’ என்கிறான். நேயம் என்னும் சொல்லை 'அன்பு' எண்ணெய் என்னும் இருபொருளில் பயன்படுத்துகிறான்.
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/120
Appearance