பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L38 மண்ணியல் சிறுதேர் காட்டிலும் கன்னக்கோல் பிடித்து வாழ்வது மேல் என்றும் எண்ணித்தான் சரு விலகன் களவில் ஈடுபடுகிறான் "துணிந்து புரியும் செயலின் கண்ணே திருமகள் வீற்றிருக்கின்றாள்' என்கிறான். அவன், பெண்களும் குழந்தைகளும் அணிந்துள்ள நகைகளைக் கழற்ற மாட்டானாம். அச்சமுற்றவனையும் உறங்குகின்ற வனையும் கொல்லமாட்டானாம். பாவத்திலும் கொஞ்சம் அறத்தைக் கடைப்பிடிக்கிறான் போலும் சருவிலகன் மனச்சான்று அவன் மேற்கொள்ளும் தொழிலை இடித்துரைக்கத்தான் செய்கிறது. தன் குலத்துக்கு இருள் உண்டாக்குவதற்காக அவன் நாணத்தான் செய்கிறான். 'பிராமண குலத்தை நரகத்தில் வீழ்த்துகின்றேன். அன்றி யானே வீழ்ந்தவன் ஆகின்றேன்: (III) என்கிறான். மதனிகையின் கட்டழகில் வீழ்ந்ததுதான் இவ்வீழ்ச்சிக்குக் காரணமாம். எனினும் சருவிலகன் பின்னால் இத்தொழிலை விடுகிறான். சாருதத்தன் வீட்டில் திருடியதற்காக வருந்துகிறான். சாருதத்தனிடம் இறுதியில் மன்னிப்புக் கேட்கிறான். - மதணிகைமேல் சந்தேகப்படும்போதும், அவசரப் பட்டுப் பெண்களைப் பழிக்கும்போதுங்கூட சருவிலகனை நம்மால் வெறுக்க முடியவில்லை (IV). மதனிகையின் மீதுள்ள அளவு கடந்த காதலால்தான் அவன் அங்ங்னம் செய்கிறான். பின்னால் உண்மையைறிந்ததும் வருந்து கிறான். - சருவிலகன் ஒரு நல்ல காதலன் மட்டுமல்லன், ஒரு நல்ல நண்பனுங்கூட இடுக்கண் களைவோன் எவனோ glauðar p-airanud Fairl Jair (A friend in need is a friend indeed) என்னும் முதுமொழிக்கேற்பச் சருவிலகன், ஆரியகனின் துன்பத்தைத் துடைக்கிறான். தன்