பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் என்ற பகுதியில் கதைமூலத்தையும் அதன் விதை மூலத்தையும் தேடிச் செல்வது நம்மை வியப்புறுத்து கின்றது. ஆசிரியன் சூத்திரகன் வரலாற்றை நூலின் அகத்தும் தேடுகிறார்; புறத்தும் திரட்டுகிறார். இறுதியில் அவன் தென்னாட்டினனாக இருத்தல்கூடும் என்ற மறைமலையடிகளின் கருத்தைச் சொல்லி முடித்து வைக்கின்றார். - நூல் தோன்றிய காலத்தைப் பலபட ஆராய்ந்து கி.பி. நான்காம் நூற்றாண்டாக இருத்தல்கூடும் எனக்காட்டி, இந்நாடகம் 1924 - இல் அமெரிக்க மண்ணில் நடத்திக் . காட்டப்பட்டபோது இந்தியரல்லாதாரும் ஏற்றிப் போற்றிய வியத்தகு செய்தியைத் தருகின்றார். மொழி பெயர்த்துத் தந்த பண்டிதமணியாரின் புகழ் மனத்தோடு 'புறம்’ என்ற பகுதி முடிவிற்கு வருகிறது. நாடகத்தின் 'அகம்' என்ற பகுதியில் நாடக அமைப்பும் சிறப்பும், அங்கங்களும் களங்களும் அக்களங்களிலே நிகழும் காட்சிகளும் என விரிந்து நிற்க, அக்காட்சிகளின் ஊடாகத் தோற்றமளிக்கும் நாடக நுட்பங்களும் ஒட்பங்களும், கதையாடல்களும் உரைப் பாடல்களுமாகப் பரந்து செல்கிறது. இடையிடையே ஏனைய மொழி இலக்கியங்களோடு ஒப்பிட்டும் உறழ்ந்தும் காட்டும் ஆசிரியரின் பன்னூற் பயிற்சி படிப்பார்க்கு இன்பமளிக் கின்றது. ! இறுதியில் வருவது அகப்புறம். இப்பகுதியில், நாடக மாந்தரின் நல்லியல்புகளும் அல்லியல்புகளும் தக்கவாறு எடுத்துக்காட்டப்படுகின்றன. சாருதத்தன் முதலாகச் சம்வாககன் ஈறாக உள்ள நாடக மாந்தரின் குண இயல்புகளில் தாம் எத்தனை உடன்பாடுகள்; எத்தனை 1I