பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I42 மண்ணியல் சிறுதேர் பேரறிவாளராகிய சூத்திரகன் உலகுக்குப் பெருந் திருவாக மிருச்சகடிகத்தைத் தந்துள்ளார். ஜூலியஸ் சீசர் நாடகத்தைப் பற்றிப் பாராட்டும்போது, இந்நாடகத்தை எழுதி வேறு எதையும் அதற்குப்பின் எழுதாதிருந்தாலுங் கூட சேக்ஸ்பியர் அவர் காலத்தில் முதல் நாடக ஆசிரியராக மதிக்கப்பட்டிருப்பார் என்கிறார் ஒர் அறிஞர். சூத்திரகன் ஒரே நாடகத்தைத்தான் இயற்றினார். அவர் காலத்தில் மட்டுமல்லாமல் இக்காலத்திலும் தலைசிறந்த நாடக ஆசிரியர்களுள் ஒருவர் என்னும் பெயர் விளங்கும் வண்ணம் அதை இயற்றினார். வழக்கிறந்த வடமொழியில் ஒர் உயிருள்ள நாடகம் அவர் நாடகம். மீண்டும் இவ் வார்த்தையைக் கூறி முடிப்போம்: ஒன்றே செய்தார்; அதுவும் நன்றே செய்தார்.

  • Julius Caesar is a play of power. It is a fine play. Had Shakespeare written it and then written no more, he could still have been called the first dramatist of his time.

- John Drinkwater, The Outline of Literature. P. 224.