பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 மண்ணியல் சிறுதேர் யற்றவன்; பரிமகம் (அசுவமேத யாகம்) புரிந்து பார்முழுதாண்ட கொற்றவன் ஒரு நூறாண்டும் பத்து நாட்களும் உயிர் வாழ்ந்து தன் ஒரே மைந்தனிடம் அரசை ஒப்படைத்து வேள்வியிற் புகுந்தவன்; சூத்திரகன் என்னும் பெயரினன் என்று தொகுத்துரைக்கின்றன. - நூலாசிரியரே தன்னைப்பற்றி இறந்தகாலத்தில் (முன் கூட்டியே தன் எதிர்காலத்தைக் கணித்து நூறு ஆண்டு களும் பத்து நாட்களும் வாழ்ந்ததாக உறுதிப்படுத்தி) உரைப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறது. இதை வைத்துச் சிலர், இந்நாடக ஆசிரியர் சூத்திரகன் அல்லர் என்பர். வேறுசிலர், ஆசிரியரைப்பற்றி வரும் முன்னுரைப் பாடல்கள் இடைச்செருகலாக இருக்க வேண்டும்; அல்லது ஆசிரியர் மற்றொருவராயிருக்க வேண்டும் என்பர். இன்னும் சிலர், தனக்கு முன்பிருந்த பாசன், (Bhasa) கவிபுத்ரன் (Kaviputra) முதலியோரைக் குறிப்பிடும் காளிதாசன், சூத்திரகனை மட்டும் ஏன் குறிப்பிடவில்லை? என்று கேட்டுச் சூத்திரகன் என்று ஒருவன் இல்லை; ஆதலால் குறிப்பிடவில்லை; என்று விடையுங் கூறுவர். கவிஞர் தண்டியின் (Dandin) காவியா தர்சத்தில் (Kavyadarsa) உள்ள ஒரு பாடல் மிருச்ச கடிகத்திலும் காணப்படுவதைக் கொண்டும், இரு நூல் களுக்குமிடையே மலிந்துள்ள சொல், கருத்தொப்புமை களைக் கொண்டும் தண்டியே மிருச்சகடிகத்தின் ஆசிரியர் என்பாரும் உளர். டாக்டர்பெரிடேல் கீத், சூத்திரகனை ஒரு கர்ணபரம்பரைக் கதைத் தலைவன்(A Legendary Person) என்கிறார். மேலும், சாருதத்தம் என்னும் நாடகத்தை இயற்றிய ஆசிரியரே முற்றுப்பெறாத அதையும் இணைத்துப் புதிய நாடகமாக மிருச்சகடிகத்தையும் இயற்றியிருக்கலாம்; இயற்றித் தன் பெயரை மறைத்து அரசன் ஒருவன் பெயரில் வெளியிட்டிருக்கலாம்