பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 25 ஆசிரியரின் திறனை முற்றும் உணர வேண்டுமானால் அவருடைய படைப்புக்குத் துணை நின்ற மூலநூல் களிடத்தும் நம் பார்வையைச் செலுத்தவேண்டும். 'இறவாத புகழுடைய நாடகமாய் விளங்கும் மிருச்ச கடிகத்திற்குரிய கதைப் பொருளைச் சோமதேவரின் கதா சரித்சாகரமும், தண்டியின் தசகுமாரசரித மும் ஓரளவு தந்துள்ளன. ஏழைப் பார்ப்பன இளைஞன் ஒருவன் 'மாய மகளிர் குலத்தில் பிறந்த மாதவி ஒருத்தியைக் காதலிப் பதும், அவள் தாயின் தடையால் பேதலிப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் இந்நூல்களில் காணப்படுகின்றன. பின், அக்காதலர்கள் அரசன் ஒருவன் ஆதரவால் இணைந்து இன்புறும் அன்றில்கள் ஆவதாகக் குணாட்டியனின் கதைத் தொகுதியான பிருகத்கதா (Brhat Katha) கூறுகிறது. இவற்றைப் பயின்று சூத்திரகன், மிருச்சகடிகத்திற்குரிய கதைப்பொருளை அமைத்துக்கொண்டார் எனலாம். ஆனால் சிலர், மேற்சொன்ன நூல்களில் உள்ள கதைத் துளிகளை சேர்த்துப் புதுவெள்ளமாக வெளிவந்த முதல் நூல் சாருதத்தமே என்பர். மேலும், அச்சாருதத்தமே நேரடியாக மிருச்சகடிகத்தின் கதை அமைப்புக்கும் உதவிய நூல் என்பர். இது, விரிவான ஆராய்ச்சிக்குரியது. 1912ஆம் ஆண்டு, திருவனந்தபுரத்துக் கணபதி சாஸ்திரியார், பதின்மூன்று வடமொழி நாடகங்களைக் கண்டுபிடித்துப் பாசன் பெயரில் வெளிப்படுத்தினார். அவற்றுள் ஒன்றே சாருதத்தம் என்னும் முற்றுப்பெறாத நான்கு அங்க நாடகம். பாசன் அன்பர் பலர் சூத்திரகன், நான்கு அங்கங்கள் கொண்ட சாருதத்தத்தின் தொடர்ச்சியாக மேலும் ஆறு அங்கங்களை எழுதி இரண்டையும் ஒன்றாக்கி மிருச்சகடிகம் என்று பெயரிட்டு முழுநாடகத்திற்கும் உரிமை கொண்டாடிவிட்டார் என்கின்றனர். இதை