பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு மதிப்பீடு 27 வடமொழி இலக்கிய உலகில் மிருச்சகடிகத்திற்குத் தனியிடம் உண்டா? இல்லையா? இக்கேள்விகளுக்கு விடை காண்பதே நம் வேலை; நம் கடன். மிருச்சகடிகத்தில் உள்ள நாந்தீ’ என்னும் நாடக வாழ்த்து சாருதத்தத்தில் இல்லை. மிருச்சகடிகத்தில் காணும் பிராகிருதத்தைக் காட்டிலும் சாருத்த்தத்தில் காணும் பிராகிருதம் பழமைமிக்கதாயிருக்கிறது. சாருதத்தச் செய்யுட்கள் இலக்கணப் பிழைகளோடுள்ளன. மிருச் சகடிகத்தில், செய்யுட்கள் எல்லாம் பிழையின்றிச் செம்மையாக ஏற்ற இடத்தில் அமைந்துள்ளன. சாருதத்தத்தில் உள்ள நடைமுறைக்கு மாறான, பொருந்தாத நிகழ்ச்சிகள் மிருச்சகடிகத்தில் பெரும்பாலும் நீக்கப் பெற்றுள்ளன; தேவையுள்ள புதிய நிகழ்ச்சிகள் சேர்க்கப் பெற்றுள்ளன. இவற்றின் மூலம், மிருச்சகடிகம், சாருதத்தத்தினின்றும் வளர்ச்சி பெற்ற புதுநூல் என்று உரைக்கப்படுகிறது.' இனியும், சாருதத்தம் மிருச்சகடிகத் திற்கு முன்தோன்றிய நூல் என்பதில் ஐயப்படவேண்டிய தில்லை. மிருச்சகடிகத்திற்கு முன்பு தோன்றிய சாருதத்தம் மிருச்ச கடிகத்திற்கு அடிப்படையாக அமைதல் இயற்கையே. முதல் அங்கத்தின் அமைப்பிலே இருநாடகங்களுக் கிடையே அத்துணை வேறுபாடில்லை. சாருதத்தத்தில் வசந்தசேனையைப் பின்தொடர்வார் இருவர்; மிருச் சகடிகத்தில் விடன், சேடன், சகாரன் என மூவர்; மிருச் f Taking all things into account, we conclude, we can readily understand the evolution of the Mr.cchakatika version from a Carudatta version but not Vice Versa. -- Dr. Sukthankar, Sukthankar Memorial Edition. Vol. II, P.124.