பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம 1 நாடக அமைப்பு "மாணிக்கம் மாணிக்கத்தோடு சேரவேண்டும்; இரத்தினம் இரத்தினத்தோடு கூடிவிளங்க வேண்டும் இப்படி நினைப்பது குற்றமா என்ன? 'குற்றம்தான்... மாணிக்கம் என்னோடுதான் சேர வேண்டும்... நானும் ஒரு கல்' என்று அரசவிதியில் கிடக்கும் ஆணவத்தால் கூறுகிறது; கூடாது' என்போரைக் குத்துகிறது - ஒரு பரற்கல்! ஒருநாள் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சியில் அரச வீதியே ஆடுகிறது; அழிகிறது. பாவம் பரற்கல் செருக்கடங்கித் தப்பிப் பிழைக்கிறது. பின்னர். பின்னர் என்ன? மாணிக்கம் மாணிக்கத்தோடு சேரும். 'இரத்தினம் இரத்தின்த்தோடு கூடி விளங்கும்." உருவகம் புரிகிறதல்லவா? வசந்தசேனையும் சாருதத்தனும் மாணிக்கக் கற்கள், சகாரன் பரற்கல் என்று t 'வசந்த சேனை, வறியவனாகிய சாருதத்தன்பாற் காதல் கொண்டுள்ளாள் என்று சகாரன்பொறாமையாற் புகலக்கேட்ட விடன், தனக்குள் கூறுவதும் இதுவே.