நாடகங்களில் பகுக்கப்படவில்லை. எனினும் ஒவ்வொரு அங்கமும் பல தொடர் காட்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். அணிகலன் அடைக்கலம்’ என்னும் மண்ணியல் சிறுதேரின் முதல் அங்கத்தில் மட்டும் ஐந்து காட்சிகள் காணப்படுகின்றன. இவை சாருதத்தன் இல்லத்திலும் அவன் இல்லம் அமைந்திருக்கும் வீதியிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன. முதற்காட்சி சாருதத்தன் இல்லத்தில் நடைபெறுகிறது; சாருதத்தனும் மைத்திரேயனும் உரையாடுகிறார்கள். சாருதத்தன் இல்லத்தில் வசந்தசேனை நுழையும் மூன்றாங் காட்சியை அமைக்குமுன் வசந்தசேனை சகாரனால் வலிந்து தொடரப்படும்: இரண்டாம் காட்சியை அமைக்கவேண்டும். அதே நேரத்தில், இரண்டாம் காட்சி முடியும்வரை, சாருதத்தன் தன் நண்பனோடு உரையாடாமல் ஊமையாய் நின்று கொண்டிருப்பது-வசந்த சேனையைக் காப்பாற்றாது வாளாயிருப்பது - அழகாயிருக்காது. இத்தொல்லையைத் தவிர்க்கக் கருதிய சூத்திரகன் சாருதத்தன் அமைதியா யிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்கிறார்; யான் தியானத்தை நிறைவேற்றுகிறேன். சற்று இருக்க' என்று மைத்திரேயனிடம் சொல்லிவிட்டுச் சாருதத்தன் வீட்டிற்குள் போவதாகக் காட்டுகிறார். இது பொருத்தமா யிருக்கிறது. நாடகம் பார்ப்போர் ஒரேசமயத்தில் சாருதத்தன் வீட்டிலும் வீதியிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கண்டின்புறும் விதத்தில் மேடையை இரண்டாகப் பகுத்துக் காட்சிகளை அமைத்துள்ளார் சூத்திரகன். மேலும், வசந்தசேனை தப்பிச் செல்வதற்கும் சாருதத்தன் தன் பணிப்பெண் என்று எண்ணி வசந்த சேனையிடம் தன் மேலாடையைச் சேர்ப்பதற்கும் வசந்தசேனை என்று சகாரன் இரதணிகையின் கூந்தலைப்
பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/56
Appearance